பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 43

கம்பர்பிரான் ஒரு ஜனநாயகவாதி அல்லர்! ஆனால், அறிஞர் அண்ணா ஏழாம் நூற்றாண்டின் ஜனநாயகவாதியான திருநாவுக்கரசர்!

'நாமார்க்கும் குடியல்லோம் - நமனை அஞ்சோம்’ என்று பல்லவ மா மன்னனை; மகேந்திரனை எதிர்த்துக் குரல் கொடுத்த பல்லவ மண்ணிலே பிறந்த அறிவரசர் அண்ணா.

கம்பருக்கு ஒர் அரசியலை எப்படி ஒற்றுமைப்படுத்தலாம் என்று தெரியாது! அதற்கு இராமாயணமே சான்று!

அதுமட்டுமல்ல, அவருக்குக் கொடுத்த பொன்னுக்காக, 'கூலி வாங்குமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே!” என்று, பூதச் சுவரைக் காக்கா’ பிடிக்க வெண்பா பாடியவர்.

அவர் கவிதைக்கு உயிர்ப்புச் சக்தி உண்டென்றால், மீண்டும் அவர் எழுப்பிய சுவர் சரிந்து விழுந்திருக்குமா?

அறிஞர் அண்ணா அவர்கள், தமிழ்ச் சமுதாயத்தை - அரசியலில் ஒற்றுமைப்படுத்தும் சக்தி பெற்றவர்! அதனால், தமிழ் மக்கள் அவருக்குச் சிலை எடுத்தார்கள்!

போதுமா மெயில் நாளேடே! அறிஞர் அண்ணாவுக்கும் . கம்பருக்கும் உள்ள தரா தரங்கள் - ஏற்றத் தாழ்வுகள்! காலத்திற்கு ஏற்ற கோல - சீலங்கள்!

கம்பர் பெருமான் காவியத்தை நான் மதிக்கிறேன்! காரணம், அவர் தமிழுக்குப் பெருமை சேர்ந்த வித்தகர்களுள் ஒர் விந்தையாளர் என்பதால்!

எங்கள் உடலிலே ஒடுவது தமிழ் ரத்தம்! தமிழ்ச் சொரணை - தமிழ் உணர்வு! தமிழ்ப் பண்புகள் குடி கொண்டிருக்கின்றன.

அதனால், கம்பருக்கு சிலை எடுத்ததை வரவேற்கின்றோம்! வணங்குகின்றோம் - சிலை அமைத்த அரசியல் இலக்கியச் சிற்பி.ைப.:

இந்த இருபதாம் நூற்றாண்டின் அரசியல் நெரிசலிலே, கம்பனைவிட, அறிஞர் அண்ணா அவர்கள் - எல்லாத்