பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

16. 1.68 அன்று “ஜெயபேரிகை’ நாளோடு, 'உலகத் தமிழ் மாநாட்டில் இழிதகை' என்ற தலைப்பிட்டு ஒரு கட்டம் கட்டிய பெட்டிச் செய்தியை வெளியிட்டது.

'இந்திரா நீ விலை மாது'

என்ற பொருள்பட, உலகத் தமிழ் மாநாட்டுக் கவியரங்கத்தில் கலந்து கொண்ட கவிஞர் திரு. அப்துர் ரகுமான் பாடினாராம்!.

அவ்வாறு பாடிய கவிஞருக்கு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களால் முதல் பரிசாகத் தங்கம் ஒன்றும் அளிக்கப்பட்டதாம்!

கவிதை ஆராய்ச்சியில் இறங்கி, தனது நொந்து போன மூளையை 'ஜெயபேரிகை’ நாளேடு, இந்தப் டாக்ஸ் செய்தியில் காட்டியிருக்கிறது!

'கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்’ என்பார்களே - அதுபோல, அரசியல் கவிதா உணர்வு பொங்கி வந்துவிட்டது; 'ஜெயபேரிகை” ஏட்டிற்கு!

கவிதை என்றால் என்ன என்றாவது தெரியுமா அந்த பத்திரிக்கைக்கு? அதன் எழுத்தர்களுக்கு!

கவிஞன் உள்ளத்தில் ஊறுகின்ற உணர்ச்சிகள், யாப்பு இலக்கணம் என்ற அரங்கத்தில் ஆடும்போது, அவை கவிதைக் கலை வடிவம் பெறுகின்றது!

கவிதையில் நேரடியான பொருட்களைப் பார்ப்பதும் அவற்றைக் கொண்டு கூட்டி பொருள்களைக் கூறுவதும் - மடக்குக் கவிதைகளிலிருந்து அதன் உரைகளை உரித்துப் பார்ப்பதும் - சிலேடைத் திரையிலே இருந்து அதன் அர்த்தங்களை நீக்கிப் பார்ப்பதும் - தேர்ந்த கவிஞர்களுக்கு மட்டுமே உண்டு!

ஒரு கவிஞர், தனது கருத்தை எடுத்துச் சொல்லும் போது

அவர் கூறுகின்ற பொருளை ஆழ்ந்து - அகழ்ந்து நோக்க வேண்டும்!