பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

அந்த பகையைத் திருப்பி, அதே பொறாமையின் முதுகுத் தோலை உரிக்கும் போது, தமது துணியைக் காணோம் - துண்டைக் கானோம் என்று அலறித் திணறி ஒடும் போதுதான்் - உண்மை உணர்வே அதுகளுக்கு உந்தியெழும்!

மாடு என்பதற்கு, பேரிகை கொள்கின்ற அறிவீனமான பொருள்படி பார்த்தால், செல்வம் என்பது மிருகமாக மாறிவிடதா?

அட பிரம்மஹர்த்தி ஏடே! அது பொருள் கொள்பவனின் சிந்தனைக் குற்றமே தவிர, மாடு என்ற சொல் மீதா குற்ற்ம் சுமத்துவான் அறிவுடையவன்?

எழுதுகோல் ஒன்று, சிந்தனைச் சிக்கல்களிடையே எல்லாம் சிக்கிவிட்டால், அது எப்படி கூவம் சேற்றைக் கூவிக் கூவிச் சந்தனாமாக்கிக் கொள்ளும் என்பதற்கு, பேரிகை பேனா ஒர் எடுத்துக்காட்டு என்ன நான் அறைவது?

இந்த உதாரணம் உரைக்கவில்லை என்றால், இதோ மற்றோர். உதாரணம் - பார் ஏடே!

“தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை!' அறிவு அவசரத்தில் தோன்றிய சிந்தனைக் கரு, இந்த வாக்கியத்தை நோக்குமானால்,. 'பொன்னி என்ற விலைமாதுக்குக் கம்பன் அடிமை' என்று அரற்றும்! அல்ல அதற்குப் பொருள்!

தா - என்றால் தாமரை என்று உரை! சி - என்றால், தாமரையிலை மேல் கொலுவீற்றிருக்கும் பூரீதேவியாகிய பொன்னி என்பது விரிவுரை!

அதாவது, திருமகள் என்று அர்த்தமாகும்! கம்பன், இலட்சுமி தெய்வத்திற்கு அடிமை என்பதுதான்் உட்பொருள்! சிலேடைச் சொற்களை அறிவு இருப்பவன் பிரித்துப் பார்க்கின்ற நேரத்தில், அதில் கிடைக்கப் பெறுகின்ற சில அரிய கருத்துக்கள் இவை!