பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #9

சிலேடைச் செய்யுட்களுக்குள் புகுந்தால், இதுபோன்ற எண்ணற்றப் புதிய கருத்துக்களைப் புகுத்தியிருப்பவனால் மட்டுமே பெற முடியும்:

ஏ, பேரிகையே இதோ பார் குறும்பும் - குத்தலுமாக நகைச்சுவையோடு பாடும் ஆசு கவிஞன் காள மேகத்தின் ஒரு வெண்பா பாடலை!

சிலேடைச் சொற்களின் அற்புதங்கள் - அப்பாடலில் எப்படி ஆட்டம் போடுகின்றன என்பதைக் கவனி

“... கெட்டேழும் குலைந்து நடுநடுங்கிப் பூதி கொப் பாகவேன்றே போய்விடுமே - ஆதி நரகாட் டகவரியை நற்சரப மாகிச்

f : *

சுருக்கா விடினஞ் சுணி

இந்த பாடலிலே வரும் முதல் சீர், எப்படிப்பட்ட ஆபாசச் சொல்லைத் தாங்கி வந்திருக்கிறது - பார்த்தாயா?

ஈற்றடியின் கடைச்சொல், என்ன சொல்லை ஏற்று

வந்துள்ளது கண்டாயா?

படிப்பதற்கே விரசம் தட்டுகின்ற அந்த இரு ஒரெழுத்து ஒரு மொழி வார்த்தைகள் ஆபாசமாக இருந்தால்கூட, பதம் பிரித்துப் பார்த்தால் அவை உயர்வான பொருளையே நமக்குப் பகுத்து நாட்டுகின்றது!

இந்தப் பாடல் சிலேடையான ஒரு பாடல்: இதன் உட்பொருளை நோக்குக 'பேரிகையே’

முதல் சீரிலே வருகின்ற கூ’ என்றால், உலகம் என்று பொருள்: தி, என்றால் - திக்குகள் எட்டும் என்பது உரை ! ஏழும் என்றால், ஏழு கடலும் என்பது விரிவுரை !

குலைந்து, நடுநடுங்கி - இதற்குக் கூடவா பொருள்புரியாமல் பத்திரிகை நடத்துவீர்?

பூதி என்றால் - விபூதி, அதாவது திருநீறு என்று அர்த்தம்: