பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

திடீரென்று விபூதி மிஸ்ரா என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரை நினைத்து விடாதே ! அது தான்ே உனது பத்திரிக்கைப் புத்தி:

ஏனென்றால், அவர் உன் போன் ற தமிழர்க்கெல்லாம் கேவலம் 'இருபத்தைந்து ரூபாய் கொடுத்தால், இந்தியைக் கற்பார்கள்' என்று நாடாளுமன்றத்தில் நம்மைப் 'பளார் பனார்’ என்று நமது சுயமரியாதைக் கன்னத்திலே அறைந்தவர் அல்லவா? அதனாலே அவரை நினைவூட்டினேன் - வருந்தற்க!

பூதிக் கொப்பாக வன்றே போய்விடுமே -

என்றால், அவை விபூதியாகப் போய்விடுமே!

அதாவது சாம்பலாகப் போய்விடுமே

என்று பொருள்! எப்போது அது சாம்பலாகப் போய்விடும்

தெரியுமா ?

ஆதி நரகாட் டவரியை நற்சரபமாக்கி என்றால் - 'அதாவது, ஆதி சேஷன் என்ற அரவம் கக்கிய நஞ்சை எடுத்து உண்ணும்போது, அந்த பாற்கடல் அமுதத்தைக் கடைகின்ற நேரத்தில்' என்று உட்பொருள்! .

அதனைச் சுருக்காவிடில் அதனைத் தடுத்து நிறுத்தா விட்டால், உலகமும் - எட்டுத் திக்குகளும், ஏழு கடல்களும் சாம்பலாகப் போய்விடுமாம்!

யார் சுருக்காவிடில் அவ்வாறு சாம்பலாகப் போகும்? இதன் உட்பொருள் புரிகின்றதா உமக்கு? தெரியவில்லையென்றால், புத்தி என்ற மத்தால் கடை கடையென்று கடை - உனது கபாலத்தை!

நஞ்சுணி - அதாவது நஞ்சை உண்ணுகின்ற நீலகண்டன் சுருக்காவிட்டால், உலகம் அப்படிப்பட்ட அதோ கதிக்கு

ஆளாகி விடுமாமம்!

அப்பாடா ! இத்தகையப் பாடலைப் பாடியவர்தான்் கவி காளமேகம்! அதுவும் சாதரண கவியல்ல அவர், ஆசுகவி!