பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 5?

போதுமா சிலேடைப் பாடல்: வேறொன்றும் வேண்டுமா! இதோ பார்:

'கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார் பெண்டீர் தமைச்சுமந்த பித்தனார் - எண்டிசைக்கும் மிக்கான தங்கைக்கும் மேலே நெருப்பை யிட்டார்:

அக்காளை ஏறி னாராம்!'

'அக் காளை ஏறினாராம்! என்றவுடனே, உனது 'பேரிகை' புத்தி, ஈனப் பொருளைத்தான்ே ஈட்டும்?

ஐயகோ அறிவினமே! கேள் உட்பொருளின் மாண்பை !

கடம்பவனத்து ஈசனார், பெண்டிரைச் சுமந்த பித்தனாராம்! எந்த பெண்டிரை?

சிவபெருமான் சிரத்திலே உள்ள கங்கையையும் - பக்கத்திலே நிற்கும் பார்வதியையும் ஈசனார் சுமந்தவராம்! அர்த்த நாரீஸ்வரர் அல்லவா அவர்?

எண்டிசைக்கு மிக்கான தங்கைக்கு மேலே - அதாவது தன் கைக்கு மேலே நெருப்பை இட்டாராம்! இது கபால மூர்த்தி யினுடையத் திருக்கோலம் - பேரிகையே !

அக் காளை ஏறி னாராம் என்றால், அது சுட்டுப் பெயரா - இல்லையா?

அதாவது, அந்த காளை மாட்டின் மீது பெருமான் ஏறினாராம் - சவாரி செய்ய! வாகனமாகப் பயன்படுத்திட. சிவபெருமானார் வாகனம் காளையாயிற்றே! அதுதான்் புரியுமே உமக்கு!

இவ்வுளவுதான்் இந்தப் பாடலுக்குப் பொருள்!

இவ்வாறு சிலேடைத் திரைக்குள் மறைவான உட்பொருட்கள் - விழுமியக் கருத்துக்கள் இலங்குவது இலக்கிய வாடிக்கை மட்டுமல்ல - வேடிக்கையுங் கூட!