பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

இத்தகைய நுண்மாண் நுழைபுலம் இல்லாத நாளேட்டின் எழுத்தாளர்கள் சிலர், சில ஏடுகளில் கூட்டுறவாக கவிஞர் அப்துர் ரகுமான் எழுதுகோலைக் கண்டு கூப்பாடு போட்டிருக்கிறார்கள்!

கவிஞர் அப்துர் ரகுமான், கவிஞர் திலகம்! இலக்கிய வித்தகர்!

புலமை பூத்த புதுமைக் கவிஞர் ஒரு பேராசிரியரும் கூட!

இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் நடைபெற்றக் கவியரங்கத்தில், அப்துர் ரகுமான் ‘பா’ பாடிடும்போது இந்தி மொழியைக் கடுமையாகக் கண்டனம் செய்தார்:

கண்டனம் என்பதை விட, அதன் திணிப்பு இலட்சனங்களை விமரிசனம் புரிந்தார்!

விமரிசனம் என்றால், ஒரு பொருளை நிறைவுபடுத்தியோ, ஆதரித்தோ, புகழ்ந்தோ பேசவேண்டும் என்பது மட்டும் விதி அல்ல. !

நிறைவுகள் என்ற பூக்களை மாலையாகத் தொடுக்கும் போது; அந்த மாலையிலே ஆடா தோடா இலைகளைக் கூட பசுமையாகவே திரவித் தொடுப்பார்கள்!

கவிஞர் அப்துர் ரகுமானது தமிழார்வம், இந்தி மொழியை ஒரு விலைமாதுக்கு ஈடாக ஒப்பிட்டது:

அவர் எழுதிய உலகத் தமிழ் மாநாட்டு கவியரங்கப் பாடலின் வரிகளை - சற்று ஆழ்ந்து படியுங்கள்!

'இந்திரர்கள் எத்தினைபேர் வந்திடினும் கணக்கிலையாம் இந்திராணி மட்டும் எல்லோருக்கும் பொதுமகளாம்'! பிரதமர் இந்திரா காந்தியை 'இந்திரா நீ விலைமாது - என்று, அப்துர் ரகுமான் கவிதை பாடியதாகத் தப்பட்டை அடித்து எழுதிய பேரிகையே!! காங்கிரஸ்ஏடுகளே!

எங்கே நீ கூறியவாறு அவர் கவிதை பாடியுள்ளார்? உமது பொருள் தரும் கருத்துடை அந்த வரி எங்கே? சொற்றொடர்கள் எங்கே - அவர் பாடிய கவிதையில்?