பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 55

ஆனால், ஜெயபேரிகை என்ற காந்தத்திற்கு இந்த இரும்பு பலமிக்க கவிதை வரி மீது மட்டும் காமம் வருவானேன்?

பொதுத் தேர்தலில் காலிடறிய - விபத்துக்காளான திரு.

காமராசர் கொள்கைக்கு, பிரதமர் இந்திரா காந்தி முரண்பட்டவர் - சிம்ம சொப்பனமானவர்!

திரு. காமராசரின் கால்களிலே ஒட்டி உதறியும், உதிராத தூசுகள் இந்த பேரிகை” சீட கோடிகள்!

பிரதமர் இந்திரா அம்மையார், திரு. காமராசரை எந்தெந்த இடத்திலே அவமானப்படுத்த முடியுமோ - அலட்சியப்படுத்த இயலுமோ, அவற்றை அடுத்தடுத்து ஆற்றினார்!

அந்த வஞ்சம்! அரசியல் வஞ்சகம்! கூனிசம் - சகுனியம், திரு. காமராஜர் அணி ஏடுகளுக்குக் குத்தி குடைவதால், இந்திராவை எந்த கோணத்திலாவது ஏசி, சாடி, பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அரசியல் வெறியாக இவ்வாறு ஊசலாடுகிறதோ!

அதனால், இந்திரா காந்திக்கு இவர்கள் ஏதோ இரத்தம் சிந்திய உறவு போல, 'பிரதமர் இந்திராவை விலைமாது ' என்று கூறலாமா?'

'உலகத் தமிழ் மாநாட்டிலே கவிஞர் ரகுமானை விட்டு பிரதமரை ஏச வைக்கலாமா? இது உலகத் தமிழ் மாநாடா அல்லாது இந்திரா காந்தி ஏசல் மாநாடா?”

என்ற வினாக்களைத் தொடுத்து, நம்மைச் சாடுவது போல பிரதமர் அம்மையாரைச் சாட ஆரம்பித்துள்ளார்கள் சிண்டிகேடர்கள்!

அவர்களுக்கு எடுத்துவிட்ட அரசியல் சொறிக்கு நம்மைச் சீப்பாக ஏந்திச் சொரிந்து கொண்டு, தங்களது அரிப்பைத் தணித்து கொள்ளும் நிலை - பேரிகை ஏந்திகளுக்கு!

கவிஞர் அப்துர் ரகுமான் எழுதிய இந்திராணி விலைமாது' என்ற கவிதைத் தொடரை, ஏ. பேரிகை ஏடே, இந்திரா நீ விலை