பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6{} மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி? ஆனால், கவிஞர் என்றும், கவியரசு என்றும், தன்னை அழைத்துக் கொண்ட திரு. கண்ணதாசன் அரசியல் துறையில் េ?

கணிவதற்கு முன் வெம்பிய கணி! அரும்புவதற்கு முன் வதங்கிய பூ! சிரிப்பதற்கு முன் சிணுங்கிய மூதேவி! நரம்பறுந்த வினை; அதன் நாதம்! சுருதி கூட்டாத தொணி அவசரத்தில் வெளிவந்த ஒரு மனிதன், அவன் பிஞ்சாகி இருக்கும்போது, அவனைக் குறை பிண்டம் என்று கூறும் அவனி!

திரு. கவிஞர் கண்ணதாசன் அரசியலில் அந்த வர்க்கம்! சிலப்பதிகாரக் காப்பிய நாடகம், கலைஞர் கருணாநிதியின் கை வண்ணம்!

பிச்சை எடுத்த இலக்கிய வரி வார்த்தைகளால் பிழைப்பு நடத்துகின்ற கவிஞர் கண்ணதாசனின் கவிதையைப் போலல்ல அது:

வண்டுகள் தேனைத் திருடும் போது, யாரும் அதைக் குற்றம் கூறுவதில்லை!

நிலவொளியைப் பச்சோந்தி திருடும்போது, அதன் உணவு அது என்று, இரக்கமுடையவன் விட்டுவிடுவான்!

மனைவியின் பாசத்தைக் கை பிள்ளை களவாடும் போது, 'குழந்தை ஒரு தொல்லை’ என்று திரு. கவிஞர் கண்ணதாசனைத் தவிர, வேறு எந்த கவிஞனும் தனது குழந்தையினுடைய முதுகில் அடிப்பதில்லை!

திரு. கண்ணதாசன், கற்பனையைக் களவாடுவதில் கை தேர்ந்த கன்னக் கோல் கவிஞர் அவரது சில பாடல் வரிகளை இலக்கிய அறுவை செய்தால், அவை அதற்கு பகிரங்கச் சானறாக உளளன.