பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4; மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

அதே அழுக்காறுதான்், கவிஞர் கண்ணதாசனை அரசியலில் அனாதையாக்கிற்று:

சினிமா உலகில் அவர் சிறந்த பாடலாசிரியராகச் சிறக்கலாம்: அதோடு நிற்க வேண்டும். அரசியலிலும், சிவாஜியைப் போல அகலக் காலை அகற்றக் கூடாது அசிங்கப்படவும் கூடாது.

அப்படி அகன்றால் என்னவாகும்! அவர் அரசியல் ஆவேசம் ஆமை புகுந்த வீடாகும்:

தடிகனா, நடிப்போடு நடமாடு: மார்லன் பிராண்டோவைக் கூட புறமுதுகிடச் செய்வேன் என்று சவால் விடு; நடிப்புலகம் கை கொடுக்கும் சிவாஜியைப் பாராட்டும்!

அரிதாரம் பூசியவரெல்லாம், அரசியலில் காலடி வைத்து விட்டதால் - மக்கள் திலகமாகி விட முடியுமா - என்ன?

பூகோளப் பந்தில் ஒரு நடிகன் பத்தரையாண்டு காலம் ஒரு நாட்டை ஆண்டது, அதுவும் முதல் முறையாக செங்கோ லேந்தியது - தமிழ் நாட்டில் என்ன - இந்தியாவிலேயே எம்.ஜி.ஆர். ஒருவர்தான்்!

இலக்கியம் ஒன்றைத் திரையோவியமாக்கி, அதை மக்களிடம் நடமாட விட்டவர் கலைஞர்!

இது, அவருக்கு இருந்த தமிழ்ப் பற்றால் ஏற்பட்ட ஆசை. அதற்காக, சினிமாவுக்கு வசனம் எழுதியவரெல்லாம் கலைஞராகக் காட்சியளிக்க முடியுமா என்ன?

இலக்கியம், சினிமாவாக ஆகக் கூடாதா? தவறா அது? சமுதாய வாழ்க்கை - அதனுள்ளே எதிரொலிக்கவில்லையா?

இலக்கியக் கோழை ஒருவனுக்கு மட்டும்தான்் இந்த ஆசை இருக்கலாமே தவிர, கலைஞரைப் போன்ற ஆண்மையாளர்கள் எதிலும் துணிந்து நின்றே செயல்படுவார்கள்!

இலக்கியத்தை எங்கேயும் வைக்கலாம்! ஏனென்றால், அதன் மதிப்பு வானம் போன்றது: