பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

திரு. கண்ணதாசன், 'பக்கெட்' என்ற ஒர் ஆங்கில சினிமாவைப் பார்த்திருக்க முடியாது! அப்போது கோப்பை யிலே அவர் குடி புகுந்திருப்பார்:

அந்த பட வசனங்கள் எல்லாமே, இலக்கியம்! ஆங்கில இலக்கியம் தெரியாதவர்கள் - அதனருமையை உணர இயலாது!

'திருவருட் செல்வர் என்ற கதை வசனத்தை எழுதிப் படம் எடுத்தார்களே, அது சினிமாவா? வசனமா? அல்லது புராண ஆதாரமா?

வெளிநாட்டுக்காரன் சிரிப்பானா? மாட்டானா? என்று கடாவும் கவியே, அவன் எந்த நோக்கத்தோடு சிரிப்பான் என்று எண்ணுகின்றீர்?

உன்னைப்போல ஒழுங்கற்ற சிந்தனையைச் சிறு வயதிலே பெற்றவர்கள் அல்லவே வெளிநாட்டுத் தமிழறிஞர்கள்!

விருப்பு - வெறுப்பு நோக்கத்தோடு இலக்கியத்தைப் பார்ப் பவர்கள் அல்லரே - வெளிநாட்டுக்காரர்கள்!

'திருடித்தான்் புகழ் பெற்றான் சேக்ஷ்பியர்' என்று அவர் நடத்திய வார இதழிலேயே எழுதிய மேதை அல்லவா திரு. கண்ணதாசனார்?

வெள்ளைக்காரனுக்கு மட்டும் அது தெரிந்திருந்தால் - உமது இலக்கிய வாத முதுகுத் தோலை அல்லவா உரித்திருப்பான்? தப்பித்தீர் நீர்! போம், போம்!

இலக்கிய விமர்சனத்தை யாரும் செய்யலாம்! அதுவும், ஆங்கில இலக்கிய விமர்சனம் செய்யத் தகுதியுடைய ஆளா நீர்?

அந்த அளவு நீர் என்ன ஆங்கிலப் புலமையுடைய ஜான்சனா? அல்லது தத்துவஞானி பிராட்லாவா?

'பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தை இழந்தாலும் இழப்போமே தவிர, சேக்ஷ்பியரின் இலக்கியங்களை இழக்கச் சம்மதிக்க மாட்டோம்' என்று; இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் பெருமகன்