பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 给?

சிந்தனையால் பெருமை பெற்ற சேக்ஷ்பியரையே 'திருடித் தான்் புகழ் பெற்றான்’ என்று பழி சுமத்திய ஆவியல்லவா நீர்?

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் மாற்றுக் குறையாதோ: பாரிக்கு மகன் உண்டா? மகள்கள் உண்டா? இவை உமது கவிதை வரிக் கருத்துக்கள் தான்ே!

நீர் எழுதிய கவிதையிலே எத்தனை எச்சில்கள் இருக்கின்றன என்பதை ஆதாரங்களோடு நிரூபித்திட வேண்டுமா?

வெளிநாட்டுக்காரன் படம் பிடிக்கின்ற கருவிகளுக்கே தந்தை. அறிவியலை அம்புலியிலே நாட்டிய அற்புத அறிவாளிகள் - மேல் நாட்டினர்!

அவன் தயாரிக்கும் படங்கள் அத்தனையும், இயற்கை யோடும் - இலக்கியத்தோடும் ஒத்துப்போக வேண்டும் என்பதற்காகக் கோடிக் கணக்காகப் பணம் செலவிடுபவன்!

'பத்துக் கட்டளைகள்' என்ற படத்தை அவன் பிடிப்பதற்குப் பட்டபாடு, இயேசு பெருமான்கூட அனுபவித்திருக்க மாட்டார்:

ஒர் ஆதாரத்தின் அடிப்படையில் படம் பிடிப்பதென்றால், அவ்வளவு பிரசவ வேதனைகள் இருக்கத்தான்் செய்கின்றன:

சினிமா வசனமாக இருந்தால்கூட, அது இலக்கியத்தோடு ஒன்றி இருக்கின்றதா என்றுதான்் மேல்நாட்டார் பார்ப்பார்கள்:

'ஜூலியஸ் சீசர் என்ற ஒரு படம் வந்தது, மக்களுக்கும் நினைவிருக்கக் கூடும்.

ஆனால், கவிஞர் கண்ணதாசன் அதைப் பார்த்திருக்கக் கூடுமோ - என்னமோ!

அந்த படம், சேக்ஷ்பியரின் இலக்கியம்! அதை வெளி நாட்டான் படம் பிடிக்கிற நேரத்தில், சேக்ஷ்பியர் வர்ணித்த மேகக் கூட்டத்தைக் கூட அவன் படம் எடுத்தான்்!

அந்த மேகக் கூட்டம் எப்படி இருக்கும்? சிலர் கேட்கக் கூடும்! இரவு நேரமாக இருந்தால் கவிஞர் கண்ணதாசன் கட்டாயம் கேட்பார் அல்லவா?