பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

窃器 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

அது பெங்களூர் சீதோஷ்ண நிலைபோல் இருக்காது! இலக்கிய தட்ப வெட்ப நிலைகளாக இருக்கும்!

அது எப்படி உனக்குத் தெரியும் என்று - நாளை உனது அரை குடம் அறிவு தளும்பும்!

ஆங்கில அறிவற்ற கண்ணதாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சி. சுப்பிரமணியம் அவர்களிடம் மூளைப் பிச்சைக்கு செவியேந்தலாம்!

இவ்வளவு விளக்கமாக - ஒரு மாணவனுக்குக் கூறுவதுபோல் ஏன் கூறுகிறேன் தெரியுமா?

அவசரப்பட்ட அரிப்போடு எழுதும் எந்த அழுக்காறாளனுக்கும் - நான் கருத்து வழங்குவதில் பாராபட்சம் காட்டாமல் சமத்துவச் சுரபியை ஏந்துபவன்!

ஆகவே, சிலப்பதிகாரத்தைப் படித்தறிந்த மேலை நாட்டானின் கையிலேதான்், கலைஞர் கொடுத்திருக்கிறாரே தவிர, ஒன்றும் தெரியாத மண்டலங்களிடம் அல்ல!

எனவே, அவன் சிரிப்பதற். லே ஒன்றுமில்லை! சிந்திக்க

தற்கு ஒன்று நத வேண்டுமானால் இடம் இருக்கின்றது!

திரு. கண்ணதாசனாரே! சிலப்பதிகாரம் ஒரு நாடகக் காப்பியமா என்று கலைஞரைக் கடாவி, உடனே அது நாடகக் காப்பியம்தான்் என்று நீரே பதிலும் பகர்ந்துள்ளிரே - அப்போது பகலல்லவோ...!

"சினிமா வசனத்திற்குக் காப்பியம் என்று கலைஞர் பெயரிட்டிருப்பது அவசரத்தாலா அல்லது அறியாமையாலா?” என்று கேட்டிருக்கிறார் கவியரசு!

வெறும் சம்பவத்திற்காகப் பாட்டெழுதி கொடுத்துவிட்டு, அதற்கும் சப்ஜெக்ட் இருக்கிறது என்று கூறும் ஆளல்லவா திரு. கண்ணதாசன்!

பூம்புகார் என்றால் காப்பியம் என்ற பெயரும் உண்டு! பூம்புகாரில் சிலப்பதிகாரமும் உண்டு! பூம்புகார் என்றால் நாடகம் என்ற பெயரும் உண்டு.