பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 69

இதில் என்ன அவசரம் ஆடுகிறது! கட்டியிருத்த கருப்பு - சிவப்புக் கரை வேட்டியை அவிழ்த்துப் போட்டுவிட்டு, கதராடைகளை மாட்டிக் கொண்ட அவசரமா இது?

திருவொற்றியூரிலே காமராசர் காலில் விழுந்து முக மண்ணைத் துடைத்துக்கொண்ட பின்பு, நேருவின் காலிலே சென்று நெடுமரமாக விழுந்துவிட்ட அவசரமா இது?

"பாதக் குறடெத்துப் பன்னுறு அடி அடிப்பேன்" என்று ‘பா’ எழுதிய பிறகு, பாவேந்தர் காலிலே சென்று விழுந்து தன்நிலை மன்னிப்புக் கேட்ட அவசரமா இது?

காங்கிரஸ் அரசியலே பிடிக்கவில்லை - தாய் கட்சிக்குத் தாவி வரட்டுமா என்று, கலைஞரைப் பெங்களுரிலே தங்கிக் கேட்டுக் கொண்ட அவசரமா இது?

திரு. கண்ணதாசன் ஒரு வாய் கொழுத்துப் போன பல்லி! அதற்கு அவ்வப்போது கழநீர் பானையிலே விழுவது வாடிக்கை:

அவசரத்தைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் விளக்கம் தருவதைப் பார்த்து, நிதான்ம் கை கொட்டி விலா நோகச் சிரிக்கின்றது!

'தமிழ் நாட்டில் சிலம்புச் செல்வர் என்றும் - பேராசிரியர் என்றும் உலா வருவோர், இது பற்றிக் கருத்து தெரிவிக்காததின் மர்மம் என்ன என்ற கேட்கிறது கவி!'

எல்லாவற்றிலும் மர்மத்தைப் பற்றிப் பேசியே, ஈ.வே. கி. சம்பத்துடன் சேர்ந்து காங்கிரசுக்குத் தாவிய கவியே!

அரசியலில் அவர் வாழ்க்கை மர்மமாகி விட்டதால், தேசிய

மர்மத்தில் தேய்ந்து போனவர் அல்லவா நீர்?

வாதங்களை எடுத்து வைக்கின்ற நேரத்தில் வற்றாத அறிவு வேண்டும் - வளமான சம்பவங்கள் வேண்டும்!

பேதங்களைக் காட்டுகின்ற நேரத்தில், புதிய திருப்பங்களையும் புகட்ட வேண்டும்.