பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 73

உம்மைக் கேட்கிறோம்! எப்போது ஐயா தோன்றின - உமக்கு இந்த வினாக்கள்?

பகலிலே நீர் எழுதியிருந்தால், டாக்டர் திரு.மு. வரதராசன் போன்ற பெரும் புலவரின் பெயர், ஒர் ஆண் மகனுடைய பெயர்தான்் என்பதைத் திட்டவட்டமாகப் புரிந்து கொண்டிருப்பீர் அல்லவா?

டாக்டர் மு.வ. அவர்கள், ஆனா? பெண்ணா? அல்லது இரண்டுமற்றவரா? என்பதை, நீர் எப்படியய்யா பரிசோதனை செய்தீர்?

கவிஞர் திரு. கண்ணதாசன் நடக்கும்போது, யாராவது பார்த் திருக்கிறீர்களா? பெட்டைக் கோழி நடை! நொடிக்கு நொடி நாடகமாடிடும் பிடி நடை!

அவர் பேசும் வார்த்தைகளின் நெளிவு - சுளிவுகளோ, நிலன் நோக்கி விரல் கீறும் அணங்குப் பண்புடையவை:

இவர் போய் டாக்டர் மு.வ. அவர்களையும் பிற புலவர் களையும், ஆனா? பெண்ணா? இரண்டுக்கும் பொதுவா? என்று கேட்கிறார் என்றால், காலத்தைத்தான்் நாம் உமிழ வேண்டும் - இல்லையா?

இந்த வீராதி வீரர், சூராதி சூரரின் வீரம், தமிழ் நாட்டுக்குத் தெரியாதா என்ன?

கல்லக்குடிப் போராட்டாம், டால்மியாபுரத்தில் நடைபெற்ற போது இந்தக் கவிஞரைக் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்!

அப்போது, இந்த வீரர் அழுத அழுகை, குழந்தைகூட அவ்வளவு அழுதிருக்காது போங்க!'முகம் வீங்கி வீங்கி, முணகி, விக்கி விக்கி அழுத்தார்! இதுதான்் இவர் சுபாவம்! - வீரத்தின் இலட்சணம்!

இவர் போய், புலவர்களைப் பேடி என்கிறாரே அட, காலமே! - உன்னை எவ்வாறு, எதனால் அபிஷேகம் செய்வதோ?