பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4. மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

“எப்படியாவது எனது அண்ணன் ஏ.எல். சீனிவாசன் அவர் களிடம் சொல்லி, ஜாமீனில் என்னை எடுக்கச் சொல் தம்பி'

- என்று தனது முதுகு வீங்கக் காவலர் உதைத்த உதைகளின் வீக்கத் தழும்புகளை, முரசொலி மாறன் அவர்களிடம் காட்டி, அழுது கதறிய மாவீரரே! நீரா, பேடிகள் என்கிறீர் புலவர் பெருமக்களை?

இந்தியப் பிரதமர் நேரு அவர்களுக்குக் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடந்ததே - அதுதான்் உமக்குப் புரியுமே கவிஞரய்யா!

இரவோடு இரவாக அன்று பெங்களுரிலே ஒடிப் போய் மறைந்து கொண்ட உமது வீரம், உனது வீட்டாருக்கு மட்டும்தான்் தெரியும் என்ற நினைப்பா? உமக்கு.

புதிதாக நீர் குடிபுகுந்தீரே அரசியலில் - காங்கிரஸ் கட்சியில்! - ' தமிழ்ச் செய்தி”, என்று, நீர் பங்கு கொண்டு உருவாக்கிய நாளேட்டை, 'நவசக்தி'யுடன் இணைத்துவிட்டோம் என்று திரு. ஈ.வி.கே. சம்பத் அவர்கள் அறிவித்து, அதன் கெளரவ ஆசிரியரும் நான்தான்் என்று, அவர் உம்மை விட்டு விட்டு தன்னை மட்டுமே கூறிக் கொண்டாரே, நினைவிருக்கிறதா உமக்கு அந்த நிகழ்ச்சி?

வீரம் விழுதுவிட்டுத் தொங்கோ தொங்கென்று இப்படியும் அப்படியும் ஆடியபடியே அலைபாய்ந்த காங்கிரஸ் ஆலமரக் கவிஞரான நீர், அப்போது உமது நண்பர்களிடம் போட்டக் கூச்சலும் - ஆடிய ஆட்டமும் என்ன? - அதற்காக செலவு செய்த உமது பணம், வீணாகப் போய் விட்டதே என்று! அரற்றி, அலட்டிக் கொண்டீர் அல்லவா? அதாவது இருக்கிறதா உமது நினைவில்? அப்போது என்னவாயிற்று உமது வீரம், அந்த இடத்திலே?

இந்த இலட்சணத்தில், நீர் தமிழ்ப் புலவர்களைப் பார்த்து பேடிகள் என்கிறீர் - இல்லையா? அட, கேவலமே கேவலமே!

'இந்த தமிழ்ப் புலவர்கள் - இந்த மண்ணிலே பிறந்ததே அவமானம்” என்று எழுதும் கவிஞரே, “பெற்றாளே பெற்றாள்