பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 75

- பிறர் நகைக்கப் பெற்றாள், ஏற்றோமற் றெற்று” என்று ஒளவை மூதாட்டி மும்முறை கூறிய பாடலடி - உமக்கும் பொருந்துமா பொருந்தாதா? நீரே கூறுமய்யா! - கவிஞரே!

உமக்கும் வீரத்திற்கும் என்னையா - ஒட்டு - உறவு? சம்பந்தம்?

'ஐம்பெரும் காப்பியத்திற்கு கருணாநிதியை விட அத்தாரிட்டி யார் இருக்கிறார்கள்!' - என்று, கேலி பேசி பொறுமும் அழுக்காறே!

ஐம்பெரும் காப்பியத்திற்கு எவனுமே அத்தாரிட்டி இல்லை! ஒரு தமிழ்க் காப்பியத்துள் ஒருவன் தனது தலையை விட்டுவிட்டானானால், அவன் செத்த பின்பும்கூட - அதன் ஆழத்தைக் கண்டுதான்் மறைந்தான்் என்று, எவனாலும் அறுதியிட்டுக் கூறமுடியாதே!

அவ்வளவு இலக்கியச் செறிவுள்ள காப்பியங்கள், காவியங்கள், செய்யுட்கள், பாடல்கள் ஏராளம் உண்டல்லவா

- தமிழில்? தெரியாததா இது உமக்கு?

'அத்தாரிட்டி யார்”, என்று நீர் கேட்பதைப் பார்த்தால், கிரேக்கப் பேரழகி கிளியோபாட்ரா போதையூட்டும் திராட்சைப் பழரசக் கோப்பைகளிலே தமிழ் நாட்டுக் கொற்கை முத்துக்களைப் போட்டுக் கலக்கிக் குடித்தாளாமே

அதைப்போல - கண்ணதாசனார் என்னமோ, தமிழ்க் காப்பியங்களை எல்லாம், ஒவ்வொன்றாகக் கரைத்துக் குடித்தவரைப் போலக் கேட்டுள்ளாரே! உமக்கு ஏனய்யா இந்தக் கேள்வி தேவைதான்ா!

புலவர்கள் என்றால் - தமிழ், தமிழ் என்றால் புலவர்கள் என்று வாழும் நாடு - தமிழ் நாடு

எந்தப் புலவரும், மற்றொரு புலவரை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏசியவரல்லன் - உம்மைப்போல்!

கவிக்குல மேதைகளான ஒட்டக் கூத்தர், புகழேந்திகள் அரசியல் அழுக்காற்றுச் சம்பவங்கள் கூட உம்மைப் போல அற்பமாக அமையவில்லையே!