பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

அவர் அணியின் சார்பாக, மாமண்டுர் தியாகேச முதலியார், 'போலி அருட்பா மறுப்பு” என்ற மறுப்புக் கட்டுரையை நூலாக வெளியிட்டார்.

அதை எதிர்த்து, 'போலி அருட்பா மறுப்புக்கு, மறுப்பாக வள்ளலாரின் தலைமை மாணவரான தொழுவூர் வேலாயுத முதலியார் 'போலி அருட்பா மறுப்பின் கண்டனம் அல்லது குதர்க் காரண்ய நாச மகா பரசு”என்ற கட்டுரையை மறுப்புக் கட்டுரை நூலாக வெளியிட்டார்.

இந்த மறுப்புகளும், வாதப் போர்களும், நீதிமன்ற விசாரணைகளும், இரண்டு அணிகள் சார்பாக, வள்ளல் பெருமான் மறைவு வரை நடந்த முதல் கட்ட அருட்பா - மருட்பா' போராகும்.

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் சார்பானவரான பண்டித ந. கதிரை வேற்பிள்ளை, இரண்டாம் கட்ட மருட்பா' போரைத் துவக்கினார். அவர் அணி சார்பாக, 'இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம்' என்ற மறுப்புக் கட்டுரை நூலாக வெளிவந்தது.

இந்த மருட்பா கட்டுரையை எதிர்த்து, ம.தி. பானுகவி என்கின்ற அருட்பா அணியினர், 'இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாசதர்ப்பணம் கண்டன நியாய வஜ்ஜிர குடாரம்” என்ற மறுப்பை நூலாக வெளியிட்டார்.

இதை எதிர்த்து, "கேள்விகளுக்கு மறுப்பு', 'குற்சிதம் கண்டனம்”, தீய நாவுக்கு ஆப்பு' என்ற நூலை மருட்பா அணியினர் மறுப்புக் கட்டுரை நூற்களாக வெளியிட்டார்கள்.

மருட்பா அணியினர் கருத்துக்களை அருட்பா அணியினர், மறுத்து, "குற்சிதம்', குற்சித கண்டன திக்காரம், வஜ்ஜிரடங்கம்’ என்ற மறுப்புக் கட்டுரைகளைப் புத்தக வடிவுகளிலே அறிக்கைகளாக வெளியிட்டனர்.