பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア8 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

இலக்கண அறிவுக்கும் திறமைக்கும் ஆசானாக நடமாடிய தொல்காப்பியரா? வன்பரணரா? உலகமே இன்று வரை காணா பொருளியலை எழுதித் தந்த, இல்லை இல்லை, வாழ்க்கைக்கே இன்று வரை யாருமே இயற்றாத வாழ்க்கைச் சட்டவியல் மேதையான தமிழ் மறை தந்த திருவள்ளுவர் பெருமானா?

நன்மைகளை மட்டுமே தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்றும் நற்பண்பாளர்களான பெரும்புலவோர் நப்பாலத்தனாரா? நத்தத்தனாரா? நக்கண்ணனாரா? இவர்கள் சுமந்த 'ந' பட்டம் போல, நீர் சுமந்த புலமைக்காக கிடைத்த பட்டம் என்னய்யா கவிஞரே!

'கவியரசு’ என்ற பட்டம் இல்லையா என்று கழறிடாதே! கவிச் சக்கரவர்த்தி கம்பருடைய ஆவி, அரசவைப் புலமைக் கோலேந்தி உம்மைத் தாக்கும்!

ஏன் தெரியுமா? வெறும் சினிமா பாடல்களை எழுதுபவர்கள் எல்லாம்; என்னை அவமானப் படுத்துகிறார்களே? என்று அந்த ஆவி சாபமும் கொடுக்கும்!

தமிழ்க் கூத்தனார், முது கூத்தனார், கணக்காயனார், தேவ குலத்தார், வண்ணக்கன், இளம் பொன் வாணிகன், பொன்வாணிகன், போன்ற புலவர்களைப் போல, உமக்கென்று, ஏதாவது ஒரு தொழில் தனியாக, சிறப்பாக உண்டா?

சினிமாவும் ஒரு தொழில்தான்ே என்கிறீரா? ஆனால், இந்த மேதைகள் அவரவர் தொழில்களைச் செய்து கொண்டே தமிழ்த் தொண்டாற்றியவர்கள்! உமக்குண்டா அந்தத் தகுதி?

நாட்டுக் கோட்டைச் செட்டியார் மரபு என்கிறீரா? அந்தத் தொழிலைத்தான்் மகா மகா கேவலப்படுத்தி விட்டீரே? நினைவிருக்கிறதா உமக்கு? அல்லது மறந்து விட்டீரா?

ஒரு முறை, உடுமலைப் பேட்டைக் கூட்டம் ஒன்றில் நீர் பேசும் போது, 'வட்டிக்கு வட்டி வாங்கும் மட்டிப் பயல்கள் வாழும் செட்டி நாட்டு மண்ணிலே பிறந்தவன் நான்’ என்று,