பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 79

உமது குலத் தொழிலையே நீர் அவமானப்படுத்திப் பேசியவர்தான்ே?

மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ கதை இலாகாவில் அப்போது நீர், பாடல் எழுதிக் கொண்டிருந்த காலம் அது! இல்லையா கவிஞரே!

அப்போதே, கலைஞர் கருணாநிதி அவர்கள், 'ஏய்யா இப்படி பேசலாமா? உமது முன்னோர் தொழிலையே கேவலப்படுத்தலாமா?’ என்று மேடையிலேயே கேட்டாரே அதையும் மறந்திருக்கமாட்டீரே!

நெடுங் கழுத்துப் பரணர், நெட்டிமையார், நரி வெரூஉத் தலையார், பரூஉ மோவாய்ப் பதுமனார், காரிக் கண்ணனார், குண்டு கட் பாரியாதன் என்ற செந்நாப் புலவர்கள், உறுப்பால் பெயர் பெற்றதைப் போல - நீர் குறுங் கழுத்தராகவோ, நெட்டுயரமாகவோ திகழ்வதாக, உமது உருவத்தை வைத்துக் கூறலாமா?

ஆனால், அவர்களைப் போல பெரும் புலமை பெற்று வரைந்த புறநானூற்றுப் பாடல்களைப் போல நீர் எழுதிய தில்லையே - எப்படியய்யா உன்னைப் பாராட்ட?

ஆலங்குடி வங்கனார், ஆலத்துர் கிழார், ஆவூர் கிழார், கோவூர் கிழார் காரி கிழார், தாமப்பல் கண்ணனார், இடைக் காடனார், கல்லாடனார், இந்தப் புலவர்கள் எல்லாம் - பிறந்த ஊரால் பெருமை பெற்றவர்கள்!

ஆனால், நீர் 'வட்டிக்கு வட்டி வாங்கும் மட்டிப் பயல்கள் வாழும் செட்டிநாட்டு மண்ணிலே பிறந்தவன் நான்' என்று, தான்் பிறந்த மண்ணே மட்டிப் பயல்கள் மண்தான்் என்று அறிவித்து விட்டீரே, கவிஞரே! பிறகு எந்த ஊர் பெயரை வைத்து உம்மை அழைப்பது?

பெருஞ்சித்திரனார் என்ற பெரும் புலவர், முட மோசியார் என்ற மேதையை, அடைக்குந் தாழ் அற்ற அன்பினால் உளம் நெகிழப் பாடினார் என்பதற்காக, மோசி பாடிய வாய்' என்று சமகாலப் புலவர்களால் அன்புருகப் பாராட்டப் பட்டார், அந்த பெருஞ்சித்திரனார் தன்மையரா நீர்!