பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

'வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' என இளங்கீரனார் என்ற பெரும் புலவர்; புலமை வித்தகராம் கபிலரை வாய் சுரக்கப் பாடினார்!

அந்த அன்பை, புலவர்கள் மீது காட்ட இதயமற்ற நீர், மாறாக, - அழுக்காறு கொண்டு கண்டபடி அவர்களை ஏசுகிறீரே! பேடிகள் என்கிறீரே! மலம் நுகரும் பன்றிகள் - நாய்கள் என்று தரம் தாழ்ந்து வசைபாடி விட்டிரே - புலவர் பெரு மக்களை நியாயந்தான்ா?

உனக்கு இரண்டின் மீது மட்டும்தான்் அன்பும் - பற்றும் உண்டு! ஒன்று மது! மற்றொன்று மங்கை உமர்கய்யாம் என்ற நினைப்பு உமக்கு என்ன! அப்படித்தான்ே!

உமர்கய்யாம், கவிஞன் மட்டுமல்ல கவிஞரே, கணித மேதை! தத்துவ தாதா? ஆனால், நீரும்தான்் அவர் வாரிசு! எவற்றில்? மது - மங்கை இவற்றில்! நான் கூறுவது சரிதான்ா கவிஞரே!

மேற்கூறிய புலவர்கள் எல்லாம் புகழ்பெற்ற சங்க காலப் பெரும் மேதைமைப் புலவர்கள்!

தமிழ்ச் சமுதாயப் பண்பாடுகளை உலகுக்கு உணர்த்தும் நிலாக் கவிஞர்களாக நடமாடிய அறிவு ஒளியர்கள்!

தமிழ், தலை நிமிர்ந்து வாழ உலகுக்கு தத்துவம் தந்த புலமைச் சிந்தனையாளர்கள்! அறிவு விண்மீன்கள்!

'இந்தத் தமிழ்ப் புலவர்கள் இருக்கிறார்களே, அவர்களைப் போல பேடிகள் இந்த உலகத்தில் இல்லை'

- என்று, இறுமாந்து எழுதியிருக்கிறீர் என்றால், மேற்குறிப்பிட்ட பெரும் புலவர்கள் எழுதிய தத்துவங்களை, பண்பாடுகளை, தமிழ்ச் சான்றாண்மைகளை எல்லாம் அவமானப்படுத்துகிறீர் என்றல்லவா அர்த்தம்? தமிழனா ஐயா நீர்?

ஏனென்றால், சங்க கால மேதை எழுதிய நூற்களை யெல்லாம் அப்படியே படித்து - மனத்தில் பதிய வைத்து, ஊருக்கு ஊர் அறிவுரையாற்றி வரும் புலவர் படைகள் அல்லவா இன்று வாழும் புலவர் பெருமக்கள்?