பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 83

புலவர்கள் தமிழ் மொழியின் வாரிசுகள் ஆயிற்றே! அவர்களைத் தரம் தாழ்த்தி எழுதிய நீரும் தமிழ்க் கவிதான்ா?

'அழியாத புகழைப் பெற்றவனை, உலகம் - அவனையல்லால், புலவர்களையே புகழ்ந்து பாராட்டாது - என்று, புலவர் குல திலகம் திருவள்ளுவர் பெருமான், அறிஞர் குல திலகங்களைப் புகழ்ந்து பேசுகின்றாரே, அதனைப் போல ஞானப் புகழ் பூத்தவரா கவிஞரே நீர்?

அத்தகைய தகுதி பெற்றவர் கவிஞர் கண்ணதாசன் என்றால் கூட, 'மன்னிப்போம் - மறப்போம்” என்ற அறிஞர் அண்ணா அவர்களின் அடக்கப் பண்பால் இருந்து விடுவோமே!

புலவர் என்றால், அதனுள்ளே உள்ள புதை பொருள் என்ன? அவர்களது மன இலக்கணம் என்ன?

'அனைவரும் அக மகிழுமாறு, அறிவுடையாரை அரவணைத்துப் பழகி, இனி அவரை என்று காண்போம் என நினைத்து, அவரை விட்டுப் பிரிகின்ற தன்மையுடையதே - கற்றவரின் தொழில்! இஃதுதான்ே புலமையின் ஊழியம்?

"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்’

இதுதான்ே, சான்றாண்மை படைத்த புலவர்களது தொழில்: உம்மிடம் உள்ளதா இந்தப் பண்பாடு?

'பணியுமாம் என்றும் பெருமை' என்பதற்குப் பகையாகி, 'தன்னை வியந்து அணியுமாம் சிறுமை’ என்பதற்கேற்ப, உம்மையே நினைந்து நினைந்து நீர் வியக்கின்றிரே, இதுவா அறிவுடைமைக்கு அணி?

"பொச்சார்பு கொல்லுமே புகழை! அதை மறந்து, சிறுமைதான்் பிறரைக் குற்றம் கூறி, கூவிக் கூவி குரல் கொடுக்கும் என்பதற்கு உவமையாக நடமாடுகின்றிரே! இதுதான்் உம்து தரமோ தகுதியோ?

ஆன்மிக ஞான வள்ளுவரான பாம்பன் சுவாமிகள், 'கழுகு மலை பாதி - கந்தகிரி பாதி’ என்று எழுதிய திருப்பதிகம் போல,