பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 83

ஆங்கில நடையைப் போலவே தமிழிலும் நாவலர் பெருமான் மொழி பெயர்த்ததை, திரு. பெர்சிவல் பாதிரியார் சென்னையிலே உள்ள மகாவித்வான் திரு. மகாலிங்க ஐயரிடம் சரி பார்க்கக் கொடுத்தார்!

அறிவுச் சுடரான திரு. மகாலிங்கம் ஐயர் மகா வித்வானாக இருந்தும், புலமைப் பொச்சாப்பின்றி, பைபிள் தமிழ் மொழி பெயர்ப்பு நடை, ஆங்கில மூல நூலைவிட மேன்மையாக உள்ளது என்று, நாவலர் பிரானைக் கட்டிப் பிடித்து மெய்சிலிர்த்துப் போற்றிய அந்த மகாலிங்க ஐயர் எங்கே? புலவர்களைப் புண்பட வசை மாசி பெய்து எழுதிய இந்தக் கண்ணதாசன் எங்கே?

அதே ஆறுமுக நாவலர் பிரான், அடக்கமே, அமைதியாகக் கொண்ட அருட்பெருஞ்சோதி வள்ளல் பெருமான் எழுதிய பாடல்கள் அருட்பாக்கள் அல்ல - மருட்யாக்கள் என்று வழக்கு மன்றம் ஏறினார்.

நீதியின் சந்நிதான்த்திலே - பார்வையாளர்கள், நீதிபதி, வழக்குரைஞர்கள் எல்லாரும் கூடி அமர்ந்த பின்பு, அறிவின் அம்புலியான, வள்ளலார் சிறிது நேரம் தாமதமாக நீதி தேவன் கேட்டத்துக்குள் நுழைந்தார்.

அவரைக் கண்ட இலக்கிய அறிவு சான்ற அந்த நீதி மன்றமே அப்போது எழுந்து நின்றது, வழக்குத் தொடுத்த நாவலரும் தன்னையுமறியாது தலை நிமிர்ந்து எழுந்து நின்றாரே, அந்தப் பெருந்தன்மை, சான்றாண்மை, மனித நேய மனப்பான்மை, யாரையும் பகையாகக் கருதாப் பண்புடைய பெரும் புலமையாளரான அந்த நாவலர் எங்கே?

புலவர்கள் பேடிகளா? ஆண்களா? பன்றிகளா? நாய்களா? என்று கேள்வி எழுப்பிய இந்த கவிஞர் கண்ணதாசன் எங்கே?

சென்னை மாநகரில், 1968-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் புலவர் குழு வரவேற்பு - நிகழ்ச்சிகளுக்கு, அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா தலைமை வகித்தார்.