பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 85

சேதுபதி பரம்பரையிலே வந்த பொன்னுசாமி தேவரும் நடத்திய வாதங்களிலே, தண்ணிரும் காவிரியே, தார் வேந்தனும் சோழனே, மண்ணாவதும் பாண்டி மண்டலமே' என்ற ஒளவையின் ‘ஏ’ காரம் பட்ட பாடு புரியுமா உமக்கு? அந்த புலமை ஏது உனக்கு? இருந்தால், புலவர்களை அழைத்து புத்துரையல்லவா கேட்டுப் புகழ்ந்திருப்பீர்? ஏசுவீரா?

'பண்டைத் தமிழர் நாகரீகம்” என்ற சொல்லாடலைப் பெரும்புலவர் கார் மேகக் கோனார், கோயில்பட்டி சான்றோர் தமிழ் இலக்கிய அவைகளிலே பேசி அற்புதங்களை நாட்டிய மாமனிதர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள், ஆளுயர மாலையை கோனாருக்குச் சூட்டி, ஆரத்தழுவிக் கொண்ட அந்த இரு பெரும் புலமை உள்ளங்கள் பேடிமைகளா - கண்ணதாசனாரே?

ஏனய்யா! கண்ணதாசன் என்ற பெருமகனாரே! செட்டி நாட்டுக் கவிஞர் தானேய்யா நீர்? 'பஞ்சகம் சிந்தயச் செட்டியார் என்று ஒருவர் இருந்தாரே - தெரியுமா? அல்லது கேள்வியாவது பட்டதுண்டா?

பஞ்சகம் என்றால் பழனி பஞ்சாமிர்தம் என்று நினைத்துக் கொள்வீரோ என்னவோ? அல்லது பழைய பஞ்சாங்கம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் - என்ன கவிஞரே!

தமிழிலே உள்ள ஐம்பெரும் காப்பியங்களை போல, பஞ்சகம் என்பதும் சைவ சித்தாந்தங்களை ஆராயும் அற்புதத் தத்துவங்களைக் கொண்ட ஐம்பெரும் காப்பியங்கள்!

'மதுரை மீனாட்சியம்மை பதிகம், சிலம்பை பதிற்றுப் பத்தந்தாதி, அருணைச் சிலேடை வெண்பாமாலை, தேவை திரி யந்தாதி, மயில்மலை பிள்ளைத் தமிழ்” என்ற ஐம்பெரும் சைவ சித்தாந்தக் காப்பியங்களை இயற்றியவர்தான், அந்த பெரும்புலவர் திரு. சிந்நயச் செட்டியார் அவர்கள்!

அந்த சைவ தத்துவ நூற்களை எழுதியவரும், செட்டி நாட்டு மண்ணின்ற செந்தமிழ்ச் செல்வர்தான். அவரை என்னவென்று