பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?


அழைக்கலாம் உமது அகராதிப்படி - மட்டிப் பயலா அல்லது பேடிப் பயலா? கொஞ்சம் யோசித்துக் கூறுமே ஐயா - காரை முத்தையா அவர்களே!


பண்டிதமணி கதிரேசச் செட்டியார் பெரும்புலவர்! தமிழ் - சமஸ்கிருத மொழிகளிலே வித்தகர்; செட்டிநாடு ஈன்றெடுத்த செந்தமிழ்ச் செம்மல்! தமிழ்க் கடல் மறைமலையடிகளாரை வழக்கு மன்றத்தில் சந்தித்தவர். இவரை என்ன பெயரிட்டு அழைக்கலாம் - பேடி என்றா? மட்டி என்றா?


புலமையுடைய எவரும் புலவர்தான்்ே!


இதிலென்ன இறந்தவர் - இருப்போர் என்ற வேறுபாடு: புலமையுடைய புலவர் என்ற பெயருடைய - அனை வரையும்தான்்ே, "இந்தப் புலவர் இருக்கின்றார்களே, அவர் களைவிட பேடிகள் இந்த உலகத்தில் இல்லை' என்றீர்?


ஒருவன், தான்்் வருந்துவதற்கு மனசாட்சி - பண்பு என்ற இரண்டும் தேவை: அவை உம்மிடம் இருந்திருந்தால் புலவர் கனைப் போய் பேடி என்று எழுதுவரா?


இதைத்தான்்், சிக்மென்ட் ஃப்ராய்டு என்ற மனோ தத்துவ ஞானி குறிப்பிடுகையில், 'ட்டு ஃபீல், மேன் நீட்ஸ் கல்ச்சர் அண்டு கான்சியஸ்னஸ்' என்றார்!


இந்த இரண்டுமே உமக்கு இல்லை - மனமும் இல்லை - அதற்கு சாட்சியுமில்லை - பண்பும் இல்லையே!


வருத்தம் உமக்கு வந்ததாகச் சொன்னால், எவன் நம்புவான்? நான் நம்ப மாட்டேன்! உன் மனமே பிள்ளை மனம்தான்்ே! ஆபத்து வந்தால் அழுவீர்! ஆனந்தம் சுரந்தால் சிரிப்பீர்! வேறு என்ன நீர்?


தமிழ்ப் புலவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி எக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை பேடி என்று பச்சையாக்வே எழுதி விட்டீரே!


உமக்கு எந்தத் தமிழ்ப் புலவர் இலக்கணம் - இலக்கியம் கற்றுக் கொடுத்தாரோ, அந்த இலக்கியத் தெய்வக் குலத்தையே