பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器怒 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

வணங்கும் பிள்ளையார்பட்டி பிள்ளையாரப்பன் உம்மை மன்னிப்பாரா?

'இறுதியாக, 'என்ன செய்வது, கடவுள் புலவனுக்கு முனையை மட்டுமா வைத்தான்்? வயிற்றையும் வைத்திருக்

f : .

கிறானே!” என்று எழுதுகிறீரே...!

என்னய்யா இது இளக்காரம்: மூளையைப் புலவனுக்கு மாத்திரமா வைத்திருக்கிறான் இறைவன்?

வயிறு நிரப்ப எக்ஸ்ட்ராக்கள் பின்னாலே சுற்றும் சினிமா கவிஞர்களுக்குக் கூடத்தான்் இறைவன் வைத்திருக்கிறான் - மூளையை!

புலவனுக்கு மட்டுமா இறைவன் வயிற்றை வைத்திருக்கிறான்?

வயிற்றுச் சோற்றுக்காகக் கட்சி மாறிடும் கயவர்களுக்குக் கூடத்தான்் இறைவன் வயிற்றை வைத்திருக்கின்றான்!

புதிதாக ஆரம்பித்த பத்திரிகைக்கு எந்த ஏஜெண்டாவது ஏமாந்து முந்திரிக் கொட்டையைப் போல பணம் அனுப்ப மாட்டானா?

அதைக் கொண்டு மனைவிகளுக்கும் - பிள்ளைகளுக்கும் - வேலையாட்களுக்கும் இட்லி சாம்பாராவது வாங்கித் தரலாமா என்று வானத்தைப் பார்த்துக் கற்பனை செய்து கொண்டிருந்த சினிமா கவிஞர்களுக்கும்தான்் வயிற்றை வைத்துவிட்டான் இறைவன்.

அட இறைவா!

ஒரு பாட்டுக்கு சான்ஸ் கிடைக்காதா என்று கையேந்திக் கும்பிட்டுக் கும்பிட்டு; சினிமா ஸ்டுடியோ படிக்கட்டுகளை ஏறி ஏறி இறங்கியவனுக்கெல்லாம் ஏனடா படைத்தாய் வயிற்றை: ஏண்டா வைத்தாய் வயிற்றை?

திரும்பிப் பார் கவிஞரே! உனது பூசிப் பிணி பிடித்திருந்த வயிற்றின் பழைய வடுக்களை எப்படியெல்லாம் திண்டாடினர் அந்த கும்பிக்குரிய தீனிக்காக, என்று, இறைவன் இருந்தால் கேட்டே தீருவான் உம்மை!