பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி §§

- எவ்வளவு அகம்பாவம் எழுதுகோல் ஆணவம் இருந் திருந்தால், தமிழ்ப் புலவர்களை இப்படி தரம் கெட்டு எழுதி யிருப்பார் கவிஞர் கண்ணதாசன்?

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் வீட்டில் காவல் கிடந்த காட்சியெல்லாம் காணாமல் போய்விட்டதே என்ற தைரியமா உமக்கு?

'அறிவுப் பிச்சை தா. அறிவுப் பிச்சை தா' என்று அல்லும் பகலும் கையேந்திக் கிடந்த அறியாமை எது?

தமிழகம் அறியும் இதை! ஆனாலும், தடித்துப் போன மூளையும் - உடலும் மறைக்கின்றதே அதை!

காலமே - பணம் வந்து விட்டால் பழைய கதைகளை எல்லாம் பார்க்கக் கூடாதென உன் கண்களை இறுக மூடிக் கொள்வாயா? கவிஞரே, புலவர்களைப் பேடி என்று கூற, உம் நாவோ, எழுதுகோலோ, மீண்டும் துள்ளிக் குதிக்குமானால், அதை அந்த இடத்திலேயே சிந்தனைக் கத்தியால் நறுக்கப்படும் - தமிழ் அறிஞர்களால் ஜாக்கிரதை!

அந்த அச்சத்தால், பேடி என்றும், ஆனா' என்றும், 'பெண்ணா என்றும் இரண்டுக்கும் பொதுவா’ என்றும் தமிழ்ப் புலவர்களைக் கேட்டுவிட்டீர்! ஐயங்கள் உம்மையே குழப்பி விட்டனவோ?

கோப்பைக் கவிஞரே, குறள் படித்தவரா நீர்? குறளுக்கு அர்த்தம் தெரிந்தால் மட்டும் போதுமா? நடைமுறையில் அதன் ஒழுக்கத்தை நிலை நாட்ட வேண்டாமா?

'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு' 'இனிய உளவாக இன்னாத கூறல் கணியிருப்பக் காய்கவர்ந் தற்று' - அல்லவா? அழுக்காறு வெறியில் எதையும் எழுதலாம்! பேசலாம்! என்ற நிலைமைக்குக் கவிஞர் வருவாரானால், உமது வெறி