பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி? தெளிகிறவரை எனது வரி எழுத்துக்கள் சுடருதறி எகிறிக் குதிக்கும்!

கவிஞரது மானத்தின் ஆணிவேரில், சுடுநீரைக் கொட்டியே தீரும். உமது மண்டை ஒட்டுக்குள்ளே சிறையிருக்கும் சிந்தனைச் சுரப்பி, சிதறி ஓடுமளவிற்குத் தாக்கித் துரத்தும் - விரட்டும்!

நீரும் நானும் சேற்றை வாரிப் பூசிக் கொள்ள வேண்டுமா? தயாரா - தமிழ்ப் புலமைக்காக?

நான் தயார்! ஏனென்றால், புலவர்கள் எனக்கு ஆசான்கள்! எனது பெருமைக்கு ஏணிகள்! அவர்கள் யாராக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியிலே இருந்தாலும் சரி.

மலத்திலே நீர் கையை வைத்தால், எனது கரம் அதற்கும் ரெடி தயார்:

மாணிக்கப் பரல்களைக் கோர்த்தெடுத்து, எனக்கு மாலை யாக்கவும் தெரியும், மலத்திலே கையைவிட்டு, உமக்கு மாலை போடவும் தெரியும் - ஜாக்கிரதை!

உமது கட்சி வெறி ஆணவம், பழையபடி புலவர் பக்கம் தலைநீட்டுமானால், ஒருமுறை நீரே 'தென்றலில்' எழுதினர் அல்லவா? பாவேந்தரை, “பாதக் குறடெடுத்துப் பன்னூறு அடி அடிப்போம்” என்று, அந்த அடி உம் மீதே விழ வேண்டுமா?

உனது வாதத்தின் தலை, சேதம் உறைகின்ற வரை தொடர்ந்து எனது எழுதுகோல் எழுதிக் கொண்டே எரியும்!

யாரைப் பார்த்து சிறிதும் அச்சமில்லாமல், பேடி என்றீர்? குரங்கு என்று குறும்பாடுகின்றீர்?

கோடைக் காலத்திலே பிடிக்க வேண்டிய பைத்தியம், வேனிற் காலத்திலேயே உமக்குப் பிடித்தால், அந்தப் பித்தம் தெளிய எலுமிச்சம் பழம் வராது - எரியிட்டிதான்் துள்ளித் துள்ளிப் பாய்ந்து வரும்!

புலவர்களைப் போய், நீர் பேடி என்றால் - அலி என்றால் - குரங்கு என்றால் - நாய்கள் என்றால், நாடி இருப்பவன் என்ன செய்வான்? வேடிக்கையா பார்ப்பான்?