பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி g?

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியா? உமக்கு இளைத்தவர்கள் புலவர் பெருமக்களா? வேறு எவரும் கிடைக்கவில்லையா? கிடைத்தால் உம் கதி என்ன என்ற பயமா?

முத்தனாய் - முருகனாய் - முருகப்பனாய் ஆகும் நிலைக்கு நீர் முற்றி விட்டீரா முத்தையா கவிஞரே வேண்டாம், தமிழ் படித்தத் தன்மானிகளைத் தாறுமாறாகத் தரம் கெட்டு ஏசாதீர்!

விவரம் தெரியாத மக்களிடத்திலே விவேகமான வார்த்தை களைப் போட்டு, நானும் கவிஞன்தான்் என்று விளம்பரப் படுத்திக் கொள்கின்ற உமது கவிஞன் புத்தியை - புலவர் களிடத்திலே காட்டாதீர்!

இருள் தவழுமுன் புன்மை மதியைப் புறமுதுகிட வைக்கும் அறிவு வைரங்கள் அவர்கள்!

டாக்டர். மு. வரதராசனார் அவர்கள் எழுதிய நூற்கள் இன்றைய இலக்கிய உலகின் விண்மீன்கள்! - அவர் திரு.வி.க.வின் இலக்கிய வாரிசு!

சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய தேசிய - ஆன்மிக - இலக்கிய - தமிழ் வரலாற்று நூற்கள், சிந்தனைக்குச் சுவையாக அமைந்திருப்பன:

இலக்கிய உலகம், இந்த இரு பெரும் புலமை மேதை களையும், பிற புலவர் குழு பெரு மக்களையும் கையெடுத்துக் கும்பிடுகின்றது - காரணம், அவர்களது ஒவ்வொரு கோணம் அறிவுடைமை ஆய்வுக்காக!

எச்சில் கோப்பையிலே இரவுப்பசியை தீர்த்துக் கொள்கின்ற கவிஞரே, நீர் இன்றுவரை என்ன எழுதிக் குவித்து வீட்டீர்? இரண்டொரு நூற்களைத் தவிர! உம்முடைய தனித் தகுதியைச் சுட்டும் சிறப்பு நூல்கள் எவை, எவை?

அவற்றில் படித்து இன்புற வேண்டிய நூல் எது? அது, உனது சினிமா பாட்டுத் தொகுப்புகள் என்றால், அது கோலியாடும் பைனுக்குத் தேவைப்படலாம்! தமிழுணர்ந்த மேதைகளுக்குத் தேவையா?