பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

அந்த உமது சில பாடல்கள் கூட, திரு. எம்.எஸ். விசுவ நாதன் இசையமைப்புத் திறமையால் கேட்கலாம். வியக்கலாம்!

பாராட்டலாம்!

சில உம்மையும் அறியாமல் விழுந்த முத்துக்கள் - தவிட்டுக் குவியலிலே பளபளக்கும் ஒர் அரிசியைப் போல!

எனவே, அறிவாளிகளுக்கு அவை ஏன்? ஞானத் தினவுக்கு அவற்றால் இதமான இன்பம் கிடைக்குமா?

கவிஞர் கண்ணதாசன் அன்றுவரை, 31.1.68 வரை எழுதிய நூல்கள் எத்தனை? மயக்கத்தில் மாறிய கட்சிகள் எத்தனை?

காப்பியடித்து நீர் எழுதிய கவிதைக் குவியல்கள் உண்டா? அப்படியானால் எவ்வளவு? எதெது? உம்முடைய ஒழுக்கத்தின் யோக்யதை? - அதன் திறவுகோல் என்ன?

பிறருக்கு, அதுவும் புலமைக்குப் புத்தி புகட்டும் அளவிற்கு நீர் என்ன புனிதரா? புத்தரா? இல்லை, சித்தரா? நீர் அப்படி என்ன அறிவின் பிறப்பிடம்?

அரசியலுக்கும் - உமக்கும் உள்ள ஒட்டு உறவு எப்படிப் பட்டது? படித்தவர்களை மதிக்கும் பண்பாடு உமக்கு உண்டா? அது என்று, நேற்றா, இன்றா, நாளையா?

பாவேந்தர் பாரதிதாசனாரை, பதை பதைக்கச் சாடிய பாவியினும் பாவியல்லவா நீர்?

'தாலி தமிழர் பண்பாடா என்ற எழுந்த அரசியல் வஞ்சத் தால், ம.பொ.சி., செங்கோல்” வார ஏடும், உமது 'தென்றல் வார ஏடும் மோதிய மோதல்கள் என்ன கொஞ்சமா - நஞ்சமா?

காந்தியின் வாரிசாகத் திகழும் காமராஜரை நீர் சாடிய சாடல்கள் என்ன - சாதாரணமான ஃபோம் பஞ்சு - மஞ்சமா? மெத்து மெத்தென்று அவர் உருள!

காமராஜர் தோல் காண்டா மிருகம் தோல் என்று கொஞ்சமும் கூசாமல் எழுதிய கைகள் அல்லவா உமது பாபக் கரங்கள்?