பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 93

காமராஜரே, அட்னாவிற்குப் பிறகு 'ஆ'வன்னாதான்ா? சந்தேக மில்லாமல் தெரியுமா? சத்தியமாகச் சொல்வீரா?' என்று அவருடைய கல்வியைச் சாடிய கவிஞரும் நீர்தான்ே கண்ணதாசரே!

பாரதப்பிரதமர் நேருவைக் காரசாரமாக அரசியல் காழ்ப்பால் தாக்கி, நேரடி ஏசல் நடத்துபவரைப் போலக் கவிதை வரைந்து, உமது தென்றல் மலரில் வெளியிட்டவரல்லவா? அப்போது நீர் தி.மு.க.!

அறிஞர் அண்ணா அவர்கள், உம்மிடம் கூறிய அறிவுரை, கண்டனம் தாளாமல், மலரை வெளியிடும் முன்பே, அந்த நேரு கவிதையோவியத்தை பக்கம் பக்கமாகக் நீர் கிழித் தெறிந்தவரல்லவா?

மூத்த அறிவுடையாரை மதித்தவரா நீர்? ஏனய்யா உம்மிடம் அந்தப் பண்பு இல்லை? இப்போது, புலவர்களையே ஏசுகின்றீரே, ஏன்?

எடுத்தேன் - கவிழ்த்தேன் - என்று பேசிட எழுதிட - உமக்கு மட்டும்தான்் தெரியும் என்ற நோஞ்சான் மூளையின் மமதையா உமக்கு?

'உமது தினவுகளை எரியீட்டி’ தாக்க ஆரம்பித்தால், உமது இலக்கிய ரத்தம் சுண்டிவிடும்! தசை சுருங்கிவிடும்! அறியாமை என்ற உமது எலும்பு அடுத்த பக்கம் ஒடி வந்து விடும் - ஜாக்கிரதை!

சான்றோர்களை மதிக்காதவர் - அவர்களை ஏசாமலாவது இருக்க வேண்டும்! இதுதான்ே நடுநிலை!

ஏறுக்கு மாறாக, பொறாமை போகும் போக்குக்கு ஏற்ப, வசை வண்ணம் தீட்டி எழுதினால், எழுத்துக்கு எழுத்து, பேச்சுக்குப் பேச்சு, திராவக எழுத்துக்களோடு எழுவோம்! புரிந்திரா காரை முத்தையா?

தமிழ் வளர்க்கும் புலவர் பெரு மக்களைப் பேடி, குரங்கு, நாய், பன்றி, என்று எழுதுபவரே - ஆட்சி உமதுபக்கம் இருக்கிறது என்ற அகம்பாவத்தாலா எழுதுகிறீர் அப்படி?