பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

'பசு ஒன்று, தான்் பருகிய நீரை எல்லாம் எவ்வாறு பாலாக மாற்றி, பாரை வாழ்விக்கின்றதோ, அதே போல தமிழ் படித்த புலவர்களின் புலமையெல்லாம் தமிழ்ப் பரன்பரைக்கு குருதி ஒட்டமாக அமைந்து விட்டது.

அதனால்தான்், 'தமிழோடு விளையாடாதீர்' என்று உம்மை மட்டுமல்ல, உம் போன்றுள்ள வேறு சிலரையும் சேர்த்தே எச்சரிக்கின்றேன்!

தப்பாக விளையாடினால், தமிழரது எழுதுகோல் செந் நெருப்பையே கொட்டும்! இருவர் மூளைகளும் மாறிவிடும் செங்களங்களாக வீணான விளைவுகளை விரும்பாதீர்!

தப்பாக என்று ஏன் எழுதினேன் என்று புரிகிறதா கவிஞரே உமக்கு?

தவறு என்றால், அறியாமையால் செய்தது. மன்னிக்கலாம் அதை - மனிதாபிமானத்துடன்!

தப்பு என்றால், அறிந்தே மீண்டும் மீண்டும் செய்வது! அதற்கு மனிதமும் இருக்காது! அபிமானமும் தலைகாட்டாது! இல்லையா? சிந்தித்து செயல்படும் கவிஞர் பெருமக்களே!

స్థితి ఆ موه