பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்0104

ஆனால்
அவளுக்கு ஒரு கணவன் இருந்தது
பிறகுதான் தெரிந்தது.

வழியில் கேட்ட இந்த வரிகள், பின்னர் ‘நம்பத்தகாத மனைவி’ (Faithiess wife) என்ற புகழ்பெறற கதைப் பாட்டாகப் புத்துயிர் பெற்றது.

அன்று-
புனித ஜேம்ஸ் இரவு!
மக்கள்
தமது கடமைகளில்
மூழ்தி இருந்தனர்
தெருவிளக்குகள் அணைந்ததும்
சிள் வண்டுகள்
திடீரென்று ஆரவாரித்தன
தெருக்கோடியில்
அவளுடைய
தூங்கும் மார்புகளைத் தொட்டேன்:
அவை-
கூரிய ஹியாசிந்த்[1]
மொட்டுக்களைப் போல்
என்னை
எட்டிப் பார்த்தன.

அவள்
ரவிக்கைக் கஞ்சியின்
மொர மொரப்பு,
பட்டுத் துணியைப்
பத்துக் கத்திகளால்
குத்திக் கிழிப்பதுபோல்
ஓசையிட்டது.

வெளிச்சமற்ற
மரங்களின் உச்சி
எங்கும் பரந்திருந்தது
ஆற்றுக்கு வெகு தூரத்தில்
நாய்கள் குரைத்தன .

கரிய பெர்ரி மரங்களையும்
நாணல் புதர்களையும்
ஆதார்ன் முட்செடிகளையும்
கடந்து சென்று
அவள் கூந்தல் கற்றைகள் படிய
மணலில் பள்ளம் தோண்டினேன்.

நான் என்
கழுத்துப் பட்டையை உருவினேன்.

  1. ஹியாசிந்த்-ஸ்பெயினில் பூக்கும் செந்நீல மலர்.