பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்0112

சுற்றி சுற்றி
வருகிறது

இரவோ-
ஒவ்வொரு
விண்மீனிலும்
என் பிம்பத்தைப்
பிரதி பலித்துக்
காட்டுகிறது.

என்னையே நான்
காணமுடியாத
வாழ்க்கை
எனக்கு வேண்டும்.

எறும்புகளையும்
பருந்துகளையும்
என்-
இலைகளாகவும்
பறவைகளாகவும்
கனவு காண்கிறேன்

கோடாலிக்காரா !
என்-
நிழலைக் கூட
வெட்டி எறிந்து விடு,
பயனற்று நிற்கும்
பரிதாப நிலையிலிருந்து
எனக்கு விடுதலை கொடு.

பயனற்ற நிலையில் இருக்கும் படைப்பிலக்கியவாதியின் பரிதவிப்பை' லார்கா இப்பாட்டில் உணர்ச்சிகரமாகச் சித்தரிக்கிறான். பூத்துக் காய்த்துக் கனி குலுங்கும் மரத்தில், பறவைகளும், வெளவால்களும் கும்பலாகக் கூடித்தின்று ஆரவாரிக்கும். அம்மரத்தின் செழுமையான வாழ்வுக்கும், உயிரோட்டத்திற்கும் அவை சான்றுகள். ஆனால், பருந்து பழ மரத்தில் உட்காருவதில்லை; அது, பட்டுப்போய்த் தனித்து நிற்கும் ஒற்றை மரத்தின் உச்சியில்தான் உட்காரும். பட்ட மரத்தை எறும்பு அரிக்கும்; பயனற்ற மனிதனை வேதனை அரிக்கும்; லார்காவின் ஆழமான கற்பனை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

லார்காவின் தகாதபாலுறவுப்பழக்கம் (Homo Sexual Practice) ஸ்பெயினிலிருந்து வெளியேறி அமெரிக்கா செல்லும் சூழ்நிலையை அவனுக்கு உருவாக்கியது. அவனுடைய பாலுறவுக் கொள்கை, அவன் எழுதிய ஓரிரு நாடகங்களிலும் பிரதிபலிக்கக் காணலாம், ஏவாள், ஆதாம் உடம்பின் ஓர் அங்கம் தானே? அப்படியென்றால் ஆதாமும் ஏவாளும் வேறல்லவே?