பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119முருகு சுந்தரம்



ப்ரெக்டிடம் இருப்பதாக வாதிடுகின்றனர். தம்மிடம் அமைத்திருந்த பல்துறை ஆற்றலைப் பற்றிப் ப்ரெக்ட் எப்போதும் பெருமைப் பட்டுக் கொண்டதில்லை.

ஒருவன்.--
தன்னைப் பற்றி
மிகையாக
நினைத்துக் கொண்டிருப்பதாகப்
பிறர் கருதக்கூடாது-

என்று தம்மைப்பற்றி ஓரிடத்தில் ப்ரெக்ட் அடக்கமாகக் கூறிக் கொள்கிறார். ஆனால் இக்கூற்று, அவருடைய பலதிறப்பட்ட காதல் விவகாரங்களில் மட்டும் பொய்யாகிவிட்டது.

ப்ரெக்டின் கவிதையாற்றலுக்கு மூலமாக விளங்கியவர்கள் லூதரும், கிப்ளிங்கும் ஆவர். இவர்களையும்விட ஆர்தர் வேலியின் சீனக்கவிதை மொழிபெயர்ப்புகள், ப்ரெக்டின்மீது அதிகத்தாக்கத்தை ஏற்படுத்தின. அம்மொழிபெயர்ப்புகள் ஒரு புதிய நடையைத் தம்மிடத்தில் தோற்றுவித்துக் கொள்ளப் ப்ரெக்டிற்குப் பெரிதும் உதவின் இவரும் சில சீனப்பாடல்களை மொழிபெயர்த்ததோடு, அதே பாணியில் தாமே சில கவிதைகளும் எழுதியுள்ளார். வேலியின் மொழிபெயர்ப்புகளோடு ஒப்பிடும்போது, பிரெக்டின் மொழிபெயர்ப்புகள், தெளிவும் இசைவும் பொருந்தி, மிகுதியான ஐரோப்பியத்தன்மைகளோடு விள்ங்குகின்றன. சீன மொழிபெயர்ப்புகளின் தொடர்பால் ப்ரெக்டின் கவிதைகளும் ஹைக்கூவைப்[1] போலவும் டங்காவைப்[2] போலவும், சுருக்கமும் சித்திரத் தன்மையும் பெற்றன. அதற்கு எடுத்துக்கட்டாக அவர் எழுதியுள்ள சிங்கக் கவிதை (To a Chinese Tea Root Lion) குறிப்பிடலாம்.

உன் நகத்தைக் கண்டு
அயோக்கியர்கள்
அச்சத்தால்
நடுங்குகின்றனர்
நல்லவர்கள்
பெருமிதமான
உன் அழகைக் கண்டு
வாயடைத்து நிற்கின்றனர்
என்கவிதையைப் பற்றியும்
இப்படிப் பிறர் பேசவேண்டும்

முதல் உலகப்போர் முடிவுற்றதும் ஜெர்மனி குழப்பத்தாலும்.

  1. இதுவும் ஒரு ஜப்பானியக்கவிதை அளவால் ஹைச்சுவை விடச் சற்றுப் பெரியது
  2. இது ஜப்பானியக் குறள். மூன்று வரிகளில் பதினேழு சீர்களைக் கொண்டது. ஏதாவது ஒரு பருவகாலத்தைப்பாடு பொருளாகக் கொண்டது. ஹொக்கு (Hokku) என்றும், ஹைக்காய் (haikai) என்றும் வேறு பெயர்களால் அழைக்கப்படுவது.