பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்O32

சீட்டித்துணி ஆடையணிந்து
அடுத்தவீட்டு
எட்டு வயது முரட்டுச்சிறுமி
ஓடிவந்து-
அவன் மீது தாவி விழுந்தாள்
அவனை-
ஓரங்கட்டினாள்,
அவன்மீது
சவாரி செய்தாள்,
தொங்கும் கூந்தலை
அசைத்துச் சிரித்தாள்,

அவளடியில்
அகப்பட்டுக் கொண்டஅவன்

[ஏழுவயதுக் கவிஞன்]

‘சிறப்புக் கெட்டவர்’ என்று பெயரெடுத்தாலும் கிறித்தவரான போதலேர், தன் சம்யத்தையோ, ஆன்மாவையோ, முக்திப் பெருவாழ்வையோ தியாகம்செய்யத் தயாராக இல்லை, ஆனால், ‘ரெம்போ தனிமனித ஆளுமை, ஆன்மா, முக்தியாவும் காலத்திற் கொவ்வாத தற்பெருமைகள்’ என்று சொன்னான். ஒரு பிடிவாதமான உணர்வோடும், துறவு மனப்பான்மையோடும் லெளகீக ஆன்மீகப் பெருமைகளை அவன் வெறுத்தொதுக்கினான். கடைசி மூச்சு இருக்கும் வரை மனித நேர்மைக்கு மதிப்புக் கொடுக்காத, கட்டுப்பாடற்ற வாழ்க்கையே வாழ்ந்தான்.

என்றாலும், ‘ஏமாற்றப்பட்ட இதயம்’ (The Cheated Heart) என்ற கவிதையில் ‘எனது மீட்சிக்கு என்ன வழி?’ என்ற பாவியின் வினாவை அவனே எழுப்பிக் கொள்கிறான். கிறித்தவ சமயத்தை ஏற்றுக் கொள்ளாத அவனுக்குச் சமயத்தீர்வு எப்படிக் கிடைக்கும்? எனவே அவன், தானே தன்னையொரு ஞானியாக்கிக் கொண்டு, தனது பாவ விமோசனத்திற்கான வழியை 15-5-1871-இல் தனது நண்பன் பால்டெம்னிக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

ஒரு கவிஞனாக மாற விரும்பும் மனிதன் தன்னை முழுமையாக ஆய்ந்து அறிகிறான்; தன் ஆன்மாவைத் தேடி அதைக் கண்காணிக்கிறான்; பின்னர் சோதித்துப் பார்க்கிறான்; கற்றுக் கொள்கிறான். ஆன்மாவை உணர்ந்து கொண்டபின் அதைப் பண்படுத்துகிறான்”

இதுதான் ரெம்போ தன் மீட்சிக்கும் முக்திக்கும் வகுத்துக் கொண்டதிட்டம், என்றாலும் பிரஸ்ஸல்ஸ் மருத்துவமனையில் சாவுக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது