பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்038

களோடு குடிபோதைப் படகில் அதீத கற்பனையாக உருவகிக்கப் படுகின்றன. ஆன்மாவின் உள்ளுணர்வுக் காட்சிகளின் பண்புகள் கூடப் படிம உத்தியால் விளக்கம் பெறுகின்றன. அவனுடைய இளமைக்கால நினைவுகள் அவன் உள்ளத்தைத் தட்டும் போது கவிதைகள் படைப்பாற்றலின் உச்சத்தையே தொடுகின்றன.

நான்
ஓயாமல் அழுதேன்.
உண்மை!
இந்த விடியல்கள் என்னை
வேதனைப் படுத்துகின்றன.

ஒவ்வொரு நிலவும்
எனக்குத் துன்பம்;
ஒவ்வொரு சூரியனும்
எனக்குக் கசப்பு.

கடு கடுப்பான அன்பு
என்னைக்
கொஞ்சங் கொஞ்சமாக
விழுங்கிக் கொண்டிருக்கிறது.

என் முட்டுக்கள்
முறியட்டும்;
என் கப்பல்
கவிழந்து போகட்டும்.

நான் கரையேறுவது
ஓர்
ஐரோப்பியக் கடற்கரையாக
இருக்கட்டும்,

அங்கே
கரிய குளத்தில்
மாலை மணத்தில்
ஒரு குழந்தை
மேமாதப்
பட்டுப் பூச்சியைப் போல்
மெல்லிய படகுவிட்டுத்
தன் கவலைகளைக்
குத்துக் காலிட்டுக்
கழிப்பதைக் காணவேண்டும்

[குடிபோதைப்படகு]

மிக இளம் வயதில் அபரிமிதமான கவிதை ஆற்றல் பெற்று விளங்கிய ரெம்போ, தன் பத்தொன்பதாம் வயதில் கவிதை எழுதுவதை ஏன் நிறுத்தி விட்டான் என்பது எல்லாருக்கும் பெரிய புதிர். அவன் சந்தர்ப்ப சூழ்நிலையாலோ, எதிர்