பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்060

ஆனால் வழிதவறிப் பல இடங்களிலும் சுற்றியலைந்து பல விதமான சோதனைகளுக்கும் அல்லல்களுக்கும் ஆளாகிப் பலதரப்பட்ட புதிய அனுபவங்களைப் பெற்று இறுதியில் தன் நாடான இதாகாவை அடைகிறான். இங்குக் காண்டங்களின் நாயகன் எஸ்ரா பவுண்ட், ஒதீசியஸின் கடைசிக் குறிக்கோள் மனைவியையும், மகனையும் சென்றடைவது. காண்டங்களின் குறிக்கோள் ‘தான் யார்’ என்பதையும், ‘உலகம் என்ன?’ என்பதையும் கண்டறிவது தான். இவ்வினாக்களுக்கு விடையறியப் பார்வையற்றுத் திரியும் நாடோடியாக அலைகின்றார் பவுண்ட்.

பவுண்ட் இந்தக் காண்டங்களைத் தாந்தேயின் தெய்வீகக் காப்பியத்திற்கு (Divine Comedy) ஒப்பிட்டுப் பேசுகிறார். தாந்தேயின் காப்பியம் மூன்று காண்டங்களாக அமைந்துள்ளது. முதல்காண்டம் நரகம் (inferno) இரண்டாவது காண்டம் கழுவாய் (Purgiaiorio.) மூன்றாவது காண்டம் சுவர்க்கம் (Purgiatouo). தாம் எழுதியுள்ள கிரேக்கம், மறுமலர்ச்சி, முதல் உலகப்போர் பற்றிய காண்டங்கள் நரகத்திற்கும், பொருளாதாரம் கடும் வட்டி பற்றிய காண்டங்கள் கழுவாய்க்கும், இறுதிக் காண்டங்களைச் சொர்க்கத்திற்கும் ஒப்பிடுகிறார் பவுண்ட்.

ஆனால் இலககியவாதிகள் இவைபற்றி வெவ்வேறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளனர். காண்டங்கள் பவுண்டின் உன்னதப் படைப்பு என்றும், உயிரோட்டமுள்ள வற்றாத காப்பியம் என்றும் ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர். ஒரு சாரார் ‘கிறுக்குப் பிடித்த, சிறு பிள்ளைத்தனமான கருத்துக்களைக் குவித்துவைத்திருக்கும் படுகுழி’ என்று பழித்துரைக்கின்றனர்.

ஒரு முறை சிலர் பவுண்டைச் சந்தித்து, “தனித் தனிக் காண்டங்கள் எதைக் கூறுகின்றன? ஒட்டு மொத்தமாக எல்லாக் காண்டங்களும் கூறும் மையக்கருத்தென்ன?” என்று கேட்டனர். அதற்குப் பவுண்ட் பின்வருமாறு விடையிறுத்தார்:

(1) “தனித் தனிக் காண்டங்கள் அறிவு ஜீவிகளின் பேச்சைப் போல், ஒழுங்கிற்கு உட்படாத ஒழுங்குடன் காணப்படும்.

(2) மொத்தக் காண்டங்களும் படிப்போரைத் துன்புறுத்தும் உருவகக்குப்பை. படிப்பவர்கள் என்ன நினைக்கிறார்களோ அவற்றை யெல்லாம் எற்றுக்கொள்ளும்”.

இந்தக் காண்டங்களைப் படித்தபிறகு ஆலன் டேட் (Allen Tate) என்ற அறிஞர் ‘இவை எதைப் பற்றியும் இல்லை’ என்ற முடிவுக்கு வந்தார்.

‘மனித வாழ்க்கையைப் பல குரல்களிலும், பல பரிமாணங்களிலும் கூறும் காப்பியமே காண்டங்கள்’ என்று பவுண்ட்