பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61முருகு சுந்தரம்

குறிப்பிட்டாலும், இவற்றில் பொதிந்துள்ள மிகைப்பட்ட வருணனைகளையும், மறைமுகமான கேலிகிண்டல்களையும், திடீர் மகிழ்ச்சிப் பரவசத்தையும், வியப்புரைகளையும், வேறுபட்ட பொருள் வழங்கும் சுட்டுச் சொற்களையும், குழப்பும் குறும்புத் தனங்களையும் புரிந்து கொள்ளச் சாதாரண அறிவுள்ளவர்களால் முடியாது. பல்மொழியறிவும், பன்முகப்பட்ட இலக்கிய வரலாற்றுப் புலமையும், கிரேக்க இதிகாசத் தெளிவும் பெற்றிருக்க வேண்டும். சீன ஜப்பானியக் கவிதைப் போக்கும், கன்பூசியத் தத்துவமும், பர்சிசமும் புரிந்திருக்க வேண்டும். பேரகராதி (Encyclopaedia) மற்றும் பன்மொழிச் சிற்றகராதிகளின் துணையும் வேண்டும். பவுண்டின் சமகால நண்பர்கள், அவர்களிடம் அவர் கொண்டிருந்த நட்பு, அந்தரங்கம் யாவும் தெரிந்திருக்க வேண்டும். இவ்வளவும் போதா. இன்னும் இசையறிவும், சிற்ப ஓவியக் கலையறிவும் வேண்டும். இவ்வளவு முஸ்தீபுகளுடன் காண்டங்களை நெருங்கினாலும், ‘அவற்றின் பொருளின் மணம் குருதியில் பரவுவதற்கு ஒவ்வொருமானவனும் ஆறுமுறையாவது படிக்க வேண்டும்’ என்று பவுண்டின் வி‘சிறி கவிஞர் ரிச்சர்டு பெர்ஹார்ட்’ என்பவர் குறிப்பிடுகிறார்

“காண்டங்கள் நாகரிகத்தின் கரையிலிருந்து கூர்ந்து நோக்கி எழுதப்பட்ட உலக வரலாறு” என்று ஃபோர்டு மேடாக்ஸ் ஃபோர்டு' என்பவர் குறிப்பிடுகின்றார்.

“காண்டங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமானால், முடிவற்ற குழப்பம் சலிப்பூட்டும் மூடுபனியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது” என்று ஃபிட்ஜரால்டு குறிப்பிகிறார்.

பவுண்டின் படைப்புக்கள் பற்றி எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவருடைய ஆர்வலர்கள் அவருடைய எழுத்தைப் புதிய வேதமாக எற்றுப் போற்றுகின்றனர். பவுண்ட் தம் கவிதைகளோடு, பிரெஞ்சுக் கவி வில்லன் பற்றி இசை நாடகம் ஒன்றும் (Opera), பல கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார். அளவிறந்த மொழி பெயர்ப்புகளும் செய்திருக்கிறார். இந்த நூற்றாண்டின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்று பவுண்டைக் கூறலாம.

பவுண்ட் பாரிசை விட்டு 1924- ஆம் ஆண்டு இத்தாலி நாட்டு ரிவைராவில் சற்று வெதுவெதுப்பான ரேபல்லோ என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்தார். 1939-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று கொஞ்சநாள் தங்கினார். அப்போது ஃபாசிசத்தைப் புகழ்ந்தும், அமெரிக்க ஜனாதிபதி ஜெஃபர்சனை முசோலினியோடு ஒப்பிட்டுப் பேசியும் அமெரிக்க மக்களின் எதிர்ப்புக்கு ஆளானார். இவரை ஆதரித்த நண்பர்களும் செய்வதறியாது திகைத்தனர். ‘டக்ளஸ் ணமுதாயக்கடன் திட்டத்தை’ (Douglas Social Credit System)ij பற்றிப் பேசி யூதர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்