பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்078

கவிஞனுக்கு (To a poet as sleet of foot as I) என்று குறிப்பிடுகிறாள். மாயகோவ்ஸ்கி தனக்குச் செய்த உதவிகளை நினைவு கூர்ந்து ‘மாயகோவ்ஸ்கிக்கு’ என்ற தலைப்பில் ஒரு நன்றிக் கவிதை எழுதினாள் ஸ்வெட்டேவா.

சிலுவைகளையும்
புகைக் கூண்டுகளையும் விட
உயரமானவன்;
தீப்பிழம்பிலும்
புகைக் கருக்கலிலும்
தன் பெயரைச்
சூட்டிக் கொண்டவன்,
தடித்த மேனித் தேவதூதன்
விளாடிமிர் வாழ்க!

என்று உள்ளம் கசிந்து அப்பாடலில் மாயகோவ்ஸ்கியை வாழ்த்துகிறாள். மாயகோவ்ஸ்கியின் உயர்ந்த தோற்றத்தையும், பேராற்றலையும், அஞ்சாமையையும் நினைவு கூரும் வண்ணம் ‘அன்பரக்கன்’ (Kind giant) என்ற தொடரால் அவனை அடிக்கடி குறிப்பிடுகிறாள்.

மாய கோவ்ஸ்கி 1927-ஆம் ஆண்டு பாரிசு நகரம் சென்றிருந்த போது அங்கிருந்த ருசிய மாணவர்கள் வால்டையர் விடுதியில் (Cafe Voltaire) ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். அக்கூட்டத்தில் மாயகோவ்ஸ்கி தமது கவிதைகளை வாசித்ததோடு, ருசிய இலக்கியத்தின் வளர்ச்சி பற்றியும் பேசினான். அப்போது ‘ருசிய வெளியேறிகள்’ (emigres) அந்த விடுதிக்கு முன் கூடி நின்று குழப்பம் செய்து கூச்சலிட்டனர். இக் கூட்டம் நடந்தபோது ஸ்வெட்டேவா அங்கில்லை. என்றாலும் மாய கோவ்ஸ்கியை ஆதரித்து ‘யூரேசி’ (Eurasie) என்ற செய்தித்தாளில் ஓர் அறிக்கை வெளியிட்டாள். அவ்வறிக்கையைப் படித்த ‘ருசிய வெளியேறிகள்’ ஸ்வெட்டேவாவைத் தங்கள் கூட்டத்திலிருந்து விலக்கி வைத்தனர். தங்கள் ஏடுகளிலும் அவளுடைய படைப்புக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டனர்.

கவிஞனின் செயற்பாட்டின் மீதும், அவன் படைப்பாற்றல் மீதும் பெருமதிப்பும் மரியாதையும் வைத்திருந்த ருசியக் கவிஞர், ஸ்வெட்டேவாவைப்போல் வேறு யாருமில்லை என்று சொல்லலாம். கலையும் வாழ்க்கையும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் கொடை பற்றி, ஸ்வெட்டேவா ஆணித்தரமான கொள்கைகளை வெளியிட்டிருக்கிறாள். ‘கவிதை என்பது விலை மதிப்பில்லாத சொத்து’ என்றும் ‘கவிஞன் சமுதாயத்தின் ஒப்பற்ற உன்னத விளைவு’ என்றும் தன்து படைப்புக்களில் பல இடங்களில் தீர்ப்பு வழங்கியிருக்கிறாள்.

ஸ்வெட்டேவாவின் உள்ளத்தில் நீங்காத இடம்பெற்ற ருசியப் பெருங்கவிஞர் அலெக்சாண்டர் பிளாக், தாம் இறப்பதற்குச்