பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

790முருகு சுந்தரம்

சில நாட்கள் முன்பாக மாஸ்கோ கலையரங்கம் ஒன்றில் தமது கவிதைகளை வாசித்தார். அதைப்பற்றித் தனது கவிதை யொன்றில் குறிப்பிட்ட ஸ்வெட்டேவா,

தனிமையில் அடைக்கப்பட்ட
சிறைக் கைதியின்
ஏகாந்தப் பேச்சைப் போலவும்
அல்லது-
உறக்கத்தில்
தானாக வெளிப்படும்
குழந்தையின் பேச்சைப்போலவும்
அலெக்சாண்டர் பிளாக்கின்
புனித இதயம்
அந்தப் பெரிய அரங்கில்
தன்னை
வெளிப்படுத்திக் கொண்டிருந்தது

என்று எழுதுகிறாள். ‘கவிதையின் முழுமையான குறிக்கோள் இதயம்’ என்பது ஸ்வெட்டேவாவின் கருத்து ‘இதயமும் ஆன்மாவும் சலனமற்று இருக்கும்போது, கவிதை தானாகப் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிவரவேண்டும்’ என்ற கருத்தை பிளாக்கைப்பற்றிய பாடலில் குறிப்பிடுகின்றாள். தனது தத்திக்கவிதை (telegram style poetry) பற்றி ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘வேகமாகத் துளைக்கப்படுவது ஆன்மா’ (Pierced to the quick = the Soul) என்று எழுதுகிறாள்.

இந்த வேகக் கவிதை முறையை முதன் முதலில் கையாண்டவன் மாயகோவ்ஸ்கி. இடத்திற்கேற்ற ஓசைநயம், சுருக்கம், முரட்டுத் தொடர்கள், ஒலியழுத்தம் ஆகியவை இக்கவிதைப் பண்புகள். இப்பண்புகளைக் கவிதையில் கொண்டுவர மாயகோவ்ஸ்கி வரிகளை உடைத்து ஏணிப்படியாக (the Step-adder effect) அடுக்குவான்; ஸ்வெட்டேவா இணைப்புக் கோடு (—) கொடுத்து எழுதுவாள். ஸ்வெட்டேவாவின் தந்திக்கவிதை:

குழப்பம்-பரப்பாதீர்கள்
இதயம்-தளர்த்தி விடுங்கள்
முழங்கைகளும்-தலையும்
முழங்கைகளும்-உள்ளமும்
இளமை-காதலும் அர்ப்பணிப்பும்
முதுமை-தூக்கமும் கொட்டாவியும்
வாழ்வதற்கு நேரமில்லை:
தப்ப முடியாது.

கேட்டவுடன் உள்ளத்தில் தைத்துப்பாயும் உணர்ச்சிக் கவிதைகளைப் பாடவல்ல பெருங்கவிஞர்கள் இவ்வுலகில் அதிக நாள் வாழ்வதில்லை என்பது அவள் கணிப்பு. அவ்வாறு