பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்84

ஒரு கவிதையில் தனது ஆன்மா வெறிபிடித்த நிலையிலும், ஒன்றுக்கும் கட்டுப் படாத நிலையிலும் இருப்பதாகக் குறிப்பிடுகிறாள் ஸ்வெட்டேவா. தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளும் ஒரு மத வெறிக் கூட்டத்தைத் (Flagellants) தனது ஆற்றல் மிக்க உரைநடை நூலால் பாராட்டிப் புகழ்ந்திருப்பது அவள் உள்ளத்தில் படர்ந்திருந்த வெறியுணர்ச்சியின் விளைவே ஆகும். தனது எல்லைமீறிய செயல்களால் ‘கிறுக்குப் பிடித்த கவிஞர்’ என்ற பெயரையும் இவள் பெறுகிறாள்.(இவளுடைய) கவிதையாற்றலும், அறிவு நுட்பமும் வியக்கத்தக்க முறையில் அமைந்திருந்தாலும் தனக்குப்பிடிக்காதவர்களை ஸ்வெட்டேவா கடுமையாகத் தாக்கி எழுதி விருக்கிறாள். ருசிய இலக்கிய வாதிகள் இவளுடைய தாக்குதலை வலிப்புப்பேச்சாக (hysterics) வருணிக்கின்றனர் என்றாலும், தனது எல்லைமீறிய தன்மையை (extremity) ஒத்துக் கொள்வதோடு, அதைத்தான் வெற்றி கொள்ளும் நிலையில் இருப்பதாக, ஸ்வெட்டேவா கூறுவது உள்ளத்தை நெகிழ்விைக்கிறது. கிரேக்கக்கதைகளில் வரும் சைக்[1] (Psyche) என்ற தேவதையே தன்னுருவில் மறுபிறவி எடுத்து மீண்டும் தனது அதிர்ச்சிக்குரிய வாழ்க்கைப் பயணத்தைத் தொட்ங்கியிருப்பதாக ஒருகவிதையில் குறிப்பிடுகிறாள். கீழ்க்கண்ட வரிகள் அவளுடைய மனக்குழப்பத்தையும் அதிர்ச்சிப் பயணத்தையும் குறிப்பிடுகின்றன:

சொற்கள்-
கறுப்பு வானில்
செதுக்கப்பட்டன.
அழகிய விழிகள்
குருடாக்கப்பட்டன.

சாவுப் படுக்கை
எங்களுக்கு
அச்சந் தரவில்லை,
காதற் படுக்கையும்
எங்களுக்கு
இன்பமாக இல்லை

கிறித்தவ சமயத்தில் ஒரு பிரிவினர். தமது குற்றங்களுக்குத் தண்டனை வழங்கத் தாங்களே தங்களைச் சாட்டையால் அடித்துத் துன்புறுத்திக் கொள்ளும் இயல்பினர் இவர்கள் செயலை ஸ்விெட்டேவர் பாராட்டி எழுதியிருக்கிறாள்.

  1. கிரேக்க புராணத்தில் ஆன்மா, வண்ணத்துப்பூச்சியின், சிறகுகளோடு பெண்ணாக உருவகப்படுத்தப்படுகிறது. அந்தப் பெண் கிரேக்கக் காதற் கடவுளான ஈராஸ்லின் (Eros) காதலியாக கூறப்படுகிறாள். அந்த ‘சைக்கோதேவதை’ தன்னுருவில் இவ்வுலகில் தோன்றி மீண்டும் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக ஸ்வெட்டேவா கூறுகிறான். அதனால்தான் தனது தனது எழுத்து மேசைக்குறிப்பில் இரண்டு சிறகுகளே பாதுகாப்பாகத் திறந்த மேனியோடு நிற்பேன் என்று எழுதுகிறாள்.