உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

47

இறவாத புகழ் பெற்ற இக்பால்


பஞ்சாபி லேபிறந்த முஸ்லிம்; பேசும்
               பலமொழிகள் கற்றுணர்ந்த கவிஞன்; மக்கள்
நெஞ்சத்திலே உலவும் ஆசை போன்றோன்,
              நீடுபுகழ், நாட்டுக்குத் தேடி வைத்தோன்.
அஞ்சாத போராற்றல் பெற்ற சிங்கம்.
              அறிஞர்க்கெல்லாம் அறிஞன்; அழகன்; ஞானி,
சஞ்சீவி; சாகாத மருந்து; இக்பால் !
              சரித்திரத்தை வளர்த்தஒரு புதிய ஏடு!

ஆராய்ச்சிக் காவியங்கள் எழுதி வைத்து
              அத்தமித்துப் போய்விட்டப் பிறைவிளக்கு
ஓராயிரம் ஆண்டு நகர்ந்திட்டாலும்,
              உலகுக்குச் செங்கதிர்போல் தேவைப் பட்டோன்.
நேராத துயரங்கள் நேரும் போதும்;
              நீரலைபோல் அசையாது, ஞானியாகும்
பேராற்றல் பெற்றிருந்த பெரியோன்! கல்விப்
              பேச்சுக்கோர் மூச்சைப்போல் இருந்து சென்றோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/49&oldid=1871880" இலிருந்து மீள்விக்கப்பட்டது