உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

புகழ் மாலை


கடவுளர்கள் பூசுரர்கள். ஆதாம், ஏவாள்,
              கலிகால தெய்வங்கள் ; அறிவு தன்னைக்
குடை சாய்க்கும் மதமனிதர், எவரும் இந்தக்
              குவலயத்தில் இதுவரையில் செய்திடாத,
வெடிவானத் திடிப்புரட்சி செய்து, ஏழ்மை
               வேதனையைப் போக்கியவன் இந்த குள்ளன்!
தடையாவும் தூள்! தூள்!! தூள்!!! சாரின் ஆட்சி
                தவிடுபொடி; இவனாலே, ருசிய நாட்டில்!


இருட்டாக இருந்திட்ட ருசிய நாட்டுக்
               கிவன் ஒருவன் இல்லாது போயியிருந்தால்;
திருட்டுக்கள்; தீச்செயல்கள்; பசியினாலே ;
               தினந்தோறும் இறப்பவரின் கணக்கு ; செல்வம்
பெருக்கிவரும் பணக்காரன், ஏழை, என்னும்
               பேதங்கள் இருந்தபடி இருந்திருக்கும் !
எரிக்கின்ற நெருப்பாக இருந்து வந்த
               இவன்தான் காண் லெனின் என்னும் புரட்சி வீரன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/52&oldid=1871884" இலிருந்து மீள்விக்கப்பட்டது