உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

புகழ் மாலை


தோளுக்குத் தந்தமலர் மாலை தன்னைத்
             தூயபெரி யாரவர்கள், வயது மிக்கத்
தாளுக்குச் சூடுகின்றேன் என்று கூறித்
             தலைவர்க்கு மரியாதை தந்த, இந்த
ஆளழகன் அருஞ்செயலோன், நமது நாட்டை
            ஆள்வதற்கு இன்றில்லை. ஆத லாலே,
தேளுக்கு அதிகாரம் கொடுத்தாற் போன்று,
            தேசத்தை ஆள்கின்றார், இப்போ துள்ளோர்!

ஆரெதிர்ப்பு வந்தாலும் ஆஞ்சி டாத
           ஆண்சிங்கம்! பெரும்பண்ணை யூரின் தங்கம்!
பேரறிவு உடையோனின் திறமை கண்டு,
            பெருமக்கள் வியக்கின்ற போது, இங்கே
ஓரறிவு பெற்றதொரு மரத்தைப் போன்றோர்
           உளறுவதில் பொருளுண்டா? சத்து உண்டா?
நாரெங்கே ? மலரெங்கே ? உலகம் போற்றும்
           நம்பன்னீர்ச் செல்வமெங்கே ? இவர்கள் எங்கே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/54&oldid=1871886" இலிருந்து மீள்விக்கப்பட்டது