உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

புகழ் மாலை


உரைநடையில் எழுதியுள நூற்கள் போக
               உயர்தமிழ்க்குத் தளராது தொண்டு செய்து,
அருஞ்சொற்கள் தனைவைத்தா ராயி ரத்து
               அறுநூற்று அறுபத்து ஆறு செய்யுள்,
நரைக்கிழவர் பாடியுளார்; கடுமையான
               நடைதனிலே அச்செய்யுள் அமைந்த போதும்
சரியான சிந்தனைகள்; உவமை, வண்ணம்;
              சந்தநயம் அத்தனையும் அவற்றில் உண்டு.

எண்ணங்கள் தருபவனே சிறந்தோன்; கோழை
              எனப்படுவோன் நூறுமுறை இறந்தோன் வாழ்வில்
கண்எனக்கு எதுவென்றால், தமிழ்தான் ! நல்ல
              கவிதைகளே என்மூச்சு, என்று ரைத்து,
மண்ணுக்குள் தூங்குகின்ற பொன்னைப் போல,
              வழக்கினிலே வாராமல் இருந்து வந்த
எண்ணற்ற தமிழ்ச் சொல்லைத் தனது நூலில்
              எடுத்தெடுத்துக் கையாண்ட தாடிக் காரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/60&oldid=1871898" இலிருந்து மீள்விக்கப்பட்டது