பக்கம்:புகழ்மாலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

புகழ் மாலை


"குடியரசு" வாரஇதழ் தன்னில், இந்தக்
    கோமானின் கட்டுரையைப் படித்து, நெஞ்சு
வெடிப்புற்று இருந்திட்ட மக்கள்; வீர
    விழிப்புற்று எழுந்ததனை-மதத்தைக் காக்கும்
ஒடிபட்ட கள்ளிகளா அறிவர்? ஆனால்
    ஒழிந்தானே என்றிடுவர்-பார்ப்பானுக்கு
எடுபிடிக ளாயிருக்கும் முண்டங் கட்கு
    இவர் போன்ற பேரறிஞன் பகைவன் தானே!

சிக்கனத்தில் இவரும் ஓர் பெரியார்! நல்ல
    செயலன்றித் தீச்செயலை அறியார். நாட்டு
மக்களுக்கு வேண்டிதோர் மனிதன். வாழ்வில்
    மறுமலர்ச்சி எண்ணத்தை விட்டுச் சென்றோன்.
திக்கெட்டும் புகழோங்கும் அறிவு பெற்றச்
    சிங்கார வேல்தன்னை மறந்து, நாட்டில்,
தக்கைகளை, மரத்துளை வைத்துக் கொண்டு
    சந்தனத்தை விட்டெறிந்தால் யார்க்கு நட்டம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/62&oldid=1489338" இலிருந்து மீள்விக்கப்பட்டது