உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

63

பேரறிஞர் அண்ணா


சரியான வழியைக் காட்டும்
                 தலைவனே, சமுதா யத்தின்
மரியாதைக் குரியோ னாவான்.
                மக்களின் தலைவ னாவான்.
பெரியாரால் மதிக்கப் பெற்ற
                பேரறி வாளர் அண்ணா
விரிவான கீர்த்தி பெற்று
                விளங்கிய தலைவ ராவார்.

தங்கத்தால் ஆன தட்டில்
                சாப்பிடும் தலைவ ருண்டு.
தங்களுக் காகப் பட்டுச்
               சட்டைகள் தைப்பா ருண்டு.
மங்கிப்போய் இருந்தோர்க் கெல்லாம்
               மறுவாழ்வு தந்த மேதை,
இங்குளோர் வியக்கும் வண்ணம்
               எளிமையாய் வாழ்ந்து வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/65&oldid=1871655" இலிருந்து மீள்விக்கப்பட்டது