பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஒரு தெரு

சிதோரணமான தெரு தான் அது. எங்கும் உள்ளது போலவே வீடுகள், சுவர்கள், சன்னல்கள், வாசல்கள் எல்லாம்.

ஒரு புறம் வரிசையாக மின்விளக்குக் கம்பங்கள். மறு பக்கம் ஒன்றிரண்டு மரங்கள். தார் போட்டபாதைதான்.

காலமும் அனுபவமும் மனித உடலில் பதித்து விடுகிற முத்திரைகளைப் போலவே அந்தப் பாதையின் பரப்பிலும் மேடு பள்ளங்கள் தாறுமாறாகப்படிந்து கிடந்தன.

நான் இந்த வழியை தேர்ந்தெடுதத்திருப்பதன் காரணம் இங்கு ஜன நடமாட்டம் அதிகம் இல்லை என்பது தான் என்று ராமமூர்த்தி அடிக்கடி எண்ணிக்கொள்வது உண்டு.

அந்தத் தெருவின் வழியாக தினந்தோறும் மூன்று நான்கு தடவைகளாவது போய் வருவான் அவன். அப்போதும் சரி யாராவது விசாரிக்கும்போதும் சரி அவன் சொன்ன பதில், நகரத்தில் உள்ள எல்லா வீதிகளையும் போல் தான் இதுவும். சர்வ சாதாரணமான தெரு’ என்பதுதான்.