பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 புண்ணியம் ஆம் பாவம்போம்!

முழுதும் மலர்வதற்கு முன்னமே கிள்ளி எறியப்பட்ட புஷ்பம் போல் துவண்டுவிட்டது அவன் உள்ளம். அவனுள் அரும்பி வந்த ஆசை கருகி விட்டது. அதைக் கருக்கி விட்டது காலம்.

அவள் ஏமாற்றி விட்டாள்” என்று குமைந்தான். என்றுமே அவள் அவனுக்கு நம்பிக்கை அளித்ததில்லை என்னும் உண்மையை அவனது ஆத்திரம் திரையிட்டு மறைத்திருந்தது.

அந்தத் தெரு வழியாக அவன் நடந்தபோது மரங்களும், விளக்குகளும், சுவர்களும், பாதையும் அவனைப் பரிகசிப்பது போல் தென்பட்டன - அவனுக்குத்தான்.

விசேஷம் பெற்றிருந்த வீடு வெறுமையாக நின்றது. அதிமுக்கியத்துவம் கொண்டிருந்த சன்னல் பாாழாய். படு சூன்யமாய் காட்சி அளித்தது. அழகியின் நினைவு பல விதமான நிழல்களாக நெளிந்தது அவன் உள்ள அரங்கிலே, அவள் நடையும் நொடிப்பும், அசைவும் சிரிப்பும். பேச்சும் பரிவும் - எல்லாம் வேதனை தரும நிழல்களாகக் குதித் தாடின.

சாதாரணத் தன்மையிலிருந்து உயர்ந்து, கனவுலக இனிமையோடு திகழ்ந்த அந்தத் தெரு இப்போது தாழ்ந்து படுவீழ்ச்சியுற்ற பாழும் பரப் பாகி விட்டது - அவன் அபிப்பிராயத்தில் தான்.

ஆகவே அவன் அந்தத் தெரு வழியே போவதையே நிறுத்தி விட்டான்.

‘ஏது, அந்தப் பக்கம் வருவதே இல்லை?” என்று கேட்பவர்களுக்கெல்லாம் ராமமூர்த்தி சொன்ன பதில் இது தான்: ‘வரவர அந்தத் தெரு மோசமாகி விட்டது. எல்லாத் தெருக்களையும் போல் அசிங்கமாய், கும்பலும் நெருக்